பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழர் தோற்றமும் பரவலும்


வளப்படுத்தியது ஆரிய மொழியே ஆயினும், அவ்வாரிய மொழியோடு எவ்வித உறவும் கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும். அதில் தென்னிந்தியத் திராவிடமொழிகளின் சாயலை ஒருவர் காணக்கூடும். அதுவே முதலாவதும், மிகச்சிறந்ததுமான நேரடி மொழி ஒட்டு ஆகும். அதில் இடம் பெற்றிருக்கும் பெயர்ச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள், திரிபுப் பெயர்ச்சொற்கள், இவை போலும் பிற சொற்கள் அனைத்தும், திராவிடமொழிக் குறியீடுகளாகக் கொள்ளப்படுகின்றன. (குறிப்பு :14 காண்க) இது, பலுஜிஸ்தான் வழியாகத் திராவிடர்கள் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்தனர் என்ற உண்மையைக் காட்டவலியுறுத்தும் சான்றாகக் கொள்ளப்பட்டது. இன்றைய மனித இன ஆய்வாளர்கள், அம்மொழியில் திராவிட மொழி இனக்கூறுகள் இடம் பெற்றிருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே நிலையில், பிராகுயி மக்கள், திராவிடர்கள் என்பதினும், அவர்கள் துருக்கிய இனத்து இரானிய இனத்தவராவர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அது, திராவிடர்களின் பழங்குடியேற்றத்தைக் குறிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு. தென்னாட்டிலிருந்து திராவிடர்களின் ஒரு பிரிவினர் வடக்கிற்கும், வடமேற்கிற்கும் சென்று அங்கேயே நிலைத்த குடியினர் ஆயினர் எனக் கூறினால், அதை மறுக்க என்ன ஆதாரம் இருக்கிறது என நான் கேட்கின்றேன். வரலாற்றுக்கு முந்திய காலத்தில், இராஜபுதனத்திலும், மத்திய இந்தியாவிலும் திராவிடர்களின் பரவல் இருந்தது என்பது, திராவிட மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளோடு நெருங்கிய ஒருமைப்பாடு உடைய மொழிகளாகிய, “வில்லி” (Villi) மற்றும் “சந்தால்” (Santal) மொழிகளில் இன்றும் பரவலாக இருப்பதிலிருந்து காணப்படுகிறது. பெரும்பாலும் திராவிட இனத்தைச் சேர்ந்தனவாகிய மோகன்லாதாரோ எழுத்துப் படிவங்களை இச்சான்றுகளோடு இணைத்துக் கொள்க. (குறிப்பு: 15 காண்க)