பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

15


மேலும், மெசபடோமிய நாட்டின் வடக்குப் பகுதியில், யூபிரெட்டஸ் ஆற்றின் வளைவில் உள்ள நாடாகிய மிடன்னியில் (Mitanni) வழங்கும் “கரியன்” (Kharian) மற்றும் “ஹூரியன்” அல்லது “ஹரியன்” (Hurrian) மொழிகள், திராவிட மொழிபோலும் மொழிகளில் சில ஆகும். ஒலிஇயல், இலக்கணம், மற்றும் சொல் அமைப்புகளில் காணப்படும் ஒருமைப்பாடு கருத்தில் இருக்கத்தக்கதாம். மிட்டானிய மக்கள், கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் எகிப்தியரோடு தொடர்ந்து போரிட்டனர். அவர்களின் சிற்றரசியர்களை மணந்துகொண்டனர். அதேவழியில் ஈரான் நாட்டுத் தென்மேற்கு நாடாகிய “எலாம்” (Elam) நாட்டில் பண்டு வழங்கிய “எலாமிடே” (Elamite) என்ற மொழிக்கும், “பிராகுயி” மொழிக்கும் இடையிலும் ஒருமைப்பாடு கண்டறியப்பட்டது. மேற்கு ஆசியாதான் “மிட்டானி” மற்றும் “எலாமிடே” மக்களின் தாயகமாம். சுமேரியன் மொழிகள் இயல்பால், தனிச்சொற்களை, வடிவமைப்பிலோ, பொருளிலோ திரிபு ஏதும் இல்லாமலே தொகைச் சொற்கள் ஆக்குவனவாம். திருவாளர் ஸ்கானர் (Schoener) அவர்கள், திராவிட ஊர்ப்பெயர்கள் சிலவற்றை, மெசபடோமியாவிலும், ஈரானிலும் தேடிக் கண்டுள்ளார். Brown JAOS 1930. P.273. காண்க.)

அமெரிக்காவில், மீஸிஸிப்பி ஆறு கடலோடு (குறிப்பு: 16 காண்க) கலக்கும் இடத்து நகராம் மெம்பிஸ் (Memphis) என்ற கடற்கரை நகரில், ஓர் இந்தியக் குடியிருப்பு இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கு வழங்கும் ‘ஊர்’ என்ற சொல், தூய தமிழ்ப்பெயர் போலவே ஒலிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில், “ஊர்” என்ற சொல், தென்னிந்தியாவில் உள்ள சிற்றூர் அல்லது நகரத்தைக் குறிக்கும். இந்த இடத்தில், பேரூழிவெள்ளப் பெருக்கிற்கு முற்பட்ட நிலப்படிவத்தில், சூரர