பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழர் தோற்றமும் பரவலும்


எது எப்படி ஆயினும், உண்மை காண்பிகளும் அறிவியல் அறிவாளர்களும், ஆரிய இனக்கொள்கை முற்றிலும் தவறானது எனக் கொண்டுள்ளனர்.

அதே வழியில், திராவிட இனம் பற்றிய கொள்கையை நாமும் நோக்குதல் வேண்டும். ஆரிய இனம் என்பது ஒரு கற்பனையாயின், திராவிட இனம் என்பது அதனினும் பெரிய கற்பனை ஆகும். திராவிடர் என்ற சொல், (குறிப்பு : 22 காண்க) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளைப் பேசும், ஒரு மக்கள் கூட்டத்தினைக் குறிக்கும் ஒரு பெயர். அம்மொழிகளில், நனிமிகப் பழைய மொழி தமிழ். என் கருத்தில், அவற்றின் தாய்மொழி என்பதை நம்ப, நீண்ட பெரும் கற்பனை ஏதும் தேவை இல்லை. கன்னட மொழியின் தொன்மைக்கான உரிமை, அண்மையில் எழுப்பப்பட்டது என்றாலும், தென்னிந்தியாவில், சமஸ்கிருத மொழி தன் ஆதிக்க முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த்தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வளம் பெற்ற மொழிகள் ஆயின என உறுதியாகக் கொள்வதே நலமாம். ஆகவே திராவிடன் என்ற சொல்லுருவம், நாம் உறுதியாகக் கூறலாம், தொடக்கத்தில், தமிழ் மொழி, மற்றும் அதனின்றும் பிறந்த மொழிகளைக் குறிக்கவே வழங்கப்பட்டது என்று. நாகரீக வளர்ச்சியின் ஏற்ற இழிவுகள் மெதுவாக இருந்த, நாகரீகமுதிர்ச்சி அற்ற தொல்லுழிக் காலத்தில், மக்கள் நாகரீகம் அற்றவர்களாய்க் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வாழ்ந்தனர். இப்பல்வேறு பழங்குடிகளைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, தமக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த சூழ்நிலை, அவர்களின் ஒழுக்கம், உள்ளுணர்வு, உடல் வளர்ச்சிகளில் அளந்தறிய மாட்டாத அளவு செல்வாக்குப் பெற்றுவிட்டது. அவர்கள் வாழ்ந்த இடத்தின் சூழ்நிலைகளின்