பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

21


வற்புறுத்தலால், அவர்கள் சில ஒழுக்கம், சில வகையான உணவு உண்ணு நீர் உடைகளை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களுக்குள்ளாகவே மணந்து கொண்டனர். இவ்வகையில் வாழ்க்கையில் ஒரு பொதுநோக்கு, மற்றும் மனவளர்ச்சி ஆகியவை, அவர்களிடையே, தங்களுக்கு உள்ளாகவே ஒருவனைத் தலைவனாகக் கொண்ட, ஒரு வலுவான கூட்டமைப்புக்குக் கொண்டு சென்றன. இந்தியாவின், அதிலும், சிறப்பாகத் தென் இந்தியாவின் தொல் பெரும் வரலாற்றின் பிரதிபலிப்பு, மற்றும் அறிவு, பழங்குடியினரிடையேயான, இந்த இரத்த உறவு ஒன்று கூடி வாழ்தல், ஒரு குழுவுக்கே உரிய உள்ளுணர்வு, ஒரு குழுவுக்கே உரிய தூண்டுதல், ஆகியவற்றிற்கு வழிகாட்டிற்கு என்பதைக் காட்டும். அது பழங்குடியினர் கூட்டமாகவோ, சாதிக் கூட்டமாகவோ தொழில்முறைக் கூட்டமாகவோ இருக்கலாம். ஆனால், குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கூட்டமாகக் கூடி வாழும் அமைப்பு அங்கு இருந்தது; அது நாட்டையும், சமுதாயத்தையும் குடியாட்சி நெறிக்குக் கொண்டுசெல்லத் துணை நின்றது. ஆகவே, திராவிட மொழி வழங்கும் நாட்டில் வாழ்ந்த மக்கள், தென்னிந்திய நாகரீகம் என்றும், மேலும் வரையறுத்த நிலையில் தமிழ் நாகரீகம் என்றும் இன்று நாம், பரவலாகப் பெயரிட்டு அழைக்கும், பல்வேறுபட்டவர் ஒன்று கூடி வாழும் ஒரு வாழ்க்கையை ஆனால் ஒரே மூலத்தில் தோன்றி, ஒரே சாடில் உடைய வாழ்க்கையைக் கண்டு வளர்த்தனர். (குறிப்பு: 23 காண்க).

சில மக்களால், பல நூற்றாண்டுக் காலம் குறிப்பிட்ட சூழ் நிலையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின், குறிப்பிட்ட சில பாணிகள், மனித மாதிரிகளில், தமக்கே, உரிய தனித்தன்மை வாய்ந்த, சில வடிவங்களைத் தோற்றுவித்துவிட்டன. தோல், உடல் நிறம், மூக்கமைப்பு ஆகியவற்றின் இனம் சார்ந்த