பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழர் தோற்றமும் பரவலும்


வேறுபடுத்திக் காட்டும் தனி இயல்புகளெல்லாம், வாழும் இடத்தின் வெப்ப, தட்பங்கள், நில இயல்களின் ஈர்ப்பாற்றலின் விளைவாம். இப்போது, மங்களூரைச் சார்ந்த மக்கள், மலையாளர்களைக் காட்டிலும் அழகாக இருக்கும் அதே நிலையில், மலையாளிகள், பொதுவாகத் தமிழர்களைக் காட்டிலும் அழகானவர். ஆரியன் என்ற சொல் எங்கெல்லாம் ஆளப்படுகிறதோ, அது ஆரிய மொழி பேசும் ஆரிய வர்த்தத்தில் வாழ்பவனைக் குறிக்கும்: அல்லது சிறந்தவன், மதிக்கத்தக்கவனைக் குறிக்கும். பண்டை இந்திய நில இயல் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் ஆரியவர்த்தம், மத்தியதேசம். தஷினபாதம் அல்லது திராவிடம் என்ற மூன்று பெரும் ஆட்சிப் பரப்புச் சார்ந்த பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பதிற்றுப்பத்தின்படி ஆரியவர்த்தம் அல்லது ஆரிய நாடு, தண்டகாரண்யம் என்ற பெருங்காட்டைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திராவிட மொழி பேசும் திராவிட நாட்டில் வாழ்பவன், திராவிடன் ஆவன். இந்தியாவின் இலக்கியங்களில், ஆரியன் என்றோ, திராவிடன் என்றோ, இனம் சார்ந்த வேறுபாடு எதுவும் இல்லை. திராவிடம், பழந்தமிழர்களின் தாயகம், திராவிடம் என்பது, அங்கம், வங்கம் மகதம் என்பனபோல் ஒரு இடத்தின் பெயர். திராவிடம் அல்லது திரமிடம் என்ற சொல் வடிவம், பொதுவாகத் தமிழ் அல்லது “தமிள்” என்ற சொல்லின் திரிபாக, அடையாளம் காணப்படும் “தமிள” என்ற பழைய சொல்வடிவின் வளர்ச்சிநிலை ஆகும்.

திராவிடர் என்றால், தமிழ் மற்றும் மலையாளம் பேசும் மக்கள் மட்டுமே ஆவர் என நாம் கருதத் தக்கவரான திராவிடர்களின், தோற்றம் அல்லது மூலம் பற்றிய ஆய்வின்போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதங்களாகிய இருமொழி இலக்கியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களில் விளக்கியபடி தமிழகம் என்பது வடக்கில் திருப்பதி மலையாலும் ஏனைய மூன்று