பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

33


குத்துவாள் முதலியன, திருவாளர் குலோட்ஸ் (Glotz) அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘தொளை’ என்பது, துளை எனும் பொருள் உடையதான தமிழ்ச் சொல். இவையெல்லாம் கிரீட் நாட்டில், குடும்பக் கல்லறைகளாம். அதே குலமரபு, அவர்கள் விரும்பும் பொருள்கள் மீதும் கைவைத்துள்ளன. அதாவது, அக்கல்லறைகளுள் வைக்கப்பட்டுள்ளன. (The: Aegean Civilzation. P. 133-37)

5. தென் இந்தியாவைக் காட்டிலும், தஷிண பீடபூமியில் மிகுதியாகக் காணப்படும், வட்டக்கல் மூடி அறை கல்லறைகள் ஐதராபாத்தில் மெளலா அலி என்னும் இடத்தில் உள்ள, இத்தகைய கல்லறை ஒன்று, ஒரே காலத்தில் இருபதுபேர், நிமிர்ந்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இறந்தார் உடலைக் கொளுத்தும் வழக்கம் இருந்தமைக்கான அகச்சான்று எதையும் காட்ட இயலாமை கூறிய புதை முறைகளில் காணலாம் பொது இயல்பாகும். கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியமான மணிமேகலையில், இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகள், ஐந்து கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் ஒன்று சுடுதல், அடுத்த ஒன்று. சுடுதலோ, புதைத்தலோ அல்லாமல், வெற்றிடங்களில் வீசிவிடுதல். இது இடுதல், இவ்விரண்டும், ஆரியப் பண்பாட்டின் செல்வாக்கைக் காட்டிக் கொடுப்பதாக நான் கருதுகின்றேன். ஏனைய மூன்றும், தென் இந்தியாவுக்கே உரியனவாம். ஆழ்ந்த குழிகளில் புதைக்கும் (தொடுகுழிப்படுவோர்), மண் தாழிகளுள் அடைத்துப் புதைத்தல் (தாழ்வயின் அடைப்போர்), தாழியில் இட்டுக் கவித்தல் (தாழியின் கவிப்போர்). “சுடுவோர், இடுவோர், தொடுகுழிப்படுப்போர், தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்” (மணி 6: 66-67). இது பண்டை முறையிலான பிணம்புதை முறைகள், தொடர்ந்து இருக்கும் நிலையில், கிறித்துவ