பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழர் தோற்றமும் பரவலும்



ஆண்டின் தொடக்கத்தில், புதுமுறைகளும், மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது.

நீலகிரிப் புதைமேடுகள் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. இவையல்லாமல், வேறுவகைக் கல்லறைகள், பாண்டுகுழிகளாம். அவை, படுகுழி அளவுக் கல்லறைகளோடு ஒப்பிடத்தக்கதாம். இவற்றோடு, குறும்பர் மற்றும், இருளர்க்கு உரியன. வீரக்கல் எனப்படும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறை (Cromlech) இவை போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் நினைவாக நாட்டப்படும். கல்லறை சார்ந்த கல் அன்று. இக்கற்கள் எல்லாம், வீரக்கல் மாசக்கல் மகாசதிக்கல் என அழைக்கப்படும். (உதாரணம் நீலகிரி காண்க.) இக்கல்லறைகளில், பல்வேறு காலங்களைச் சேர்ந்த பலபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள், வேல், சிறிய ஈட்டி, அம்பு, கத்தி,வெட்டுவாள், அரிவாள்களும் அவற்றுள் அடங்கும். இவை, கல் மற்றும் இரும்புகளால் செய்யப்பட்டன. அவற்றுள் சிலவற்றிற்கு, மரக் கைப்பிடிகளும் பொருத்தப்பட்டிருந்தன. மட்பாண்டப் பொருள்களும், மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மண்டை ஓடுகளும் வெளிக்கொணரப்பட்டன. பித்தளையால் செய்யப்பட்ட அணிகள், கருவிகள் ஜெபமாலைமணிகள், அபிரகத்துண்டுகள், நெல்உமி, தினை உள்ள பானைகள், ஆதிச்ச நல்லூரில் கண்டதுபோலும் மணிமுடிபோலும் அணிகள் ஆகியன, பல்வேறு கல்லறைகளில் காணப்பட்டன. (A.R.S. Of India. 19023 P. 111-140)நீலகிரி மண்பாண்டங்களில், விலங்குகளின் உருவம் காணப்பட்டபோது, ஆதிச்ச நல்லூரில் பித்தளையால் வார்க்கப்பட்ட விலங்கு உருவங்கள் காணப்பட்டன. இவ்வாறு காட்டப்பட்ட, வீட்டில் வளர்க்கப்பட்ட விலங்குகள், எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல் கோழி, முதலியன, கொடு விலங்குகள், புலி, யானை, மற்றும், மறிமான் முதலியன. இரும்பு