பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

35


மண்வாரி, அரிவாள், நெல் மற்றும் தினைகளின் உமி, சிறிய ஆடைகளை நெய்யும் அறிவு, நல்ல பருவத்துக் களிமண்ணால் செய்து சுடப்பட்ட மட்பாண்டங்கள், விரிவான உலோகத் தொழில்கள் ஆகியவற்றிலிருந்து அறியப்பட்டவாறு ஆதிச்சநல்லூர் நாகரீகம், உழவுத் தொழில் அறிவோடு கூடிய, கால மாற்றத்திற்குரிய நாகரீகமாம். இரும்பு மிக அதிகமாகப் பயன்பட்டிருந்த நிலையில், பித்தளையும் செப்பும் அருகியே இருந்தன.

பெரும்பாலும் பிற்காலத்தனவாய குகைக்கல்லறைகளில் உள்ள பொருட்களை ஆராய்ந்து பார்க்கச் சென்றால், காணக்கூடிய கால முரண்பாட்டினை, காலவழு அதாவது பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும், முற்காலப்பண்புகளைப் பிற்காலத்திற்கும் கொண்டு செல்வதைக் காணலாம். தொல் பழங்காலத்தைச் சேர்ந்தனவாய நீண்ட உருளை வடிவிலான ஜெபமாலை மணிக்கற்கள், கி.பி. 100க்கும் 200க்கும் இடைப்பட்டனவாய, நாணயங்களோடு கலந்துள்ளன. இவை ஆந்திரநாட்டுக் கிருஷ்ணா மாவட்டத்தில் காணப்படுபவை. கோவை மாவட்டத்துச் சூலூரில் உள்ள பாரக்கல் காலத்துக் கல்லறைகளில், கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, எரான் வகை (Eran) நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டதைச் சேர்ந்த தங்கல் எனும் இடத்தில் உள்ள ஒரு கல்லறையில், கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தனவாய, இரும்பாலான மீன் பிடிமுள், அழகுற வடிவமைக்கப்பட்ட மண்பாண்டங்கள், மூக்கு, காது அணிகள் கண்ணாடி வளையல்கள், துளையிடு கருவியால் முத்திரை இடப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்துக் கழுகுமலைச் சவக்குழியில், மண்குழாய்கள் இரும்பால்