பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

43


சமகாலத்த-ஒரே ஊழிக்காலத்தைச் சேர்ந்தது. (பெரும்பாலும் ஒரு காலத்தில் அவற்றோடு இணைந்திருந்தது.) பெரிதும் பிளவுண்டதும், கரடுமுரடான தோற்றம் உடையதும் வங்காள விரிகுடாவை நோக்கி நிற்பதும் ஆகிய கிழக்குமலைத் தொடர்ச்சி, தொல் உயிர் ஊழிக்காலத்தின் முடிவுகாலம் தொட்டு, வளைகுடாவின் கடல் நீர், மேற்கு நோக்கிப் பாய்ந்து கரைகளை அரித்துவிடாமைக்கும், சென்னைக் கடற்கரைதான் மிகச்சிறிய பிரதிநிதியாக, இன்று இந்தியாவைக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவுக்கு முற்பட்ட பெருநிலப் பரப்பின் கிழக்குக் கரையாக அமையவும் காரணமாம். இந்தியத் தீபகற்பத்தின், கிழக்குத் தடுப்பு அணை, அதாவது கிழக்குக் கடற்கரை, அத்துணை நனிமிகப் பழமையானதாம். ஆனால், வரலாற்றுக்கு முந்திய இப்பெரு நிலப்பரப்பின் வடமேற்கு எல்லையாக ஆரவல்லி மலைகள் அமைந்திருந்தன என்பது தெளிவாகும்போது, உறுதி ஆகும்போது, வடகிழக்கு எல்லையாக எது அமைந்திருந்தது என்பது அத்துணைத் தெளிவாகத் தெரியவில்லை. அந்நாட்களில் கங்கைச்சமவெளி இல்லை. பெரும்பாலும் ராஜ்மகால் மலைகளும் அஸ்ஸாம் நாட்டு மலைகளும், சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கில், இமாலய நிலப்பகுதியாகத் தொடர்ந்திருந்தன. ஒப்பு நோக்க, பர்மா நாட்டு மலைகள் மிக இளையவாக இருக்க மேற்கு இமயத்தைக் காட்டிலும், கிழக்கு இமயம் நனிமிகப்பழமையானது என்பது உறுதி. அடுத்துத் தொடர்ந்தன, நிலநடுக்கமோ, கடல்கோளோ இல்லாத நீண்ட பெரும் அமைதியும் கோண்டவனம் என அழைக்கப்படும் பரந்து அகன்ற மத்திய நிலப்பகுதி தோன்றிய காலமாம் ஆறுகளின் போக்கால், வண்டல் படிவங்கள் அமைதியாகத் தோன்றலும் ஆம். பனிமூடிய மலைப்பாறைகள் இருப்பதும்.இராஜபுதானத்தில் பனிஉருகுநிலை இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கன இப்பொருள் கோளில், ஆரவல்லி மற்றும் ராஜ்மகால் மலைப்பகுதிகள், தென்