பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழர் தோற்றமும் பரவலும்



ஆப்பிரிக்காவின் விரிவு, அல்லது வேறு அல்ல என்ற, பெரும்பாலும், மறுக்கமுடியாத உண்மையை நாம் எதிர் கொள்கிறோம். தொல்பழங்கால இத்தொடர்பினை உறுதி செய்யத் தேடிப் பெற்ற அகச் சான்றுகள் முடிவானவை. ("India” by: Col. Sir. T.H. Holdich, page.-7-8; “C.P. Traite de Geoloie", by A. de Lapparent 4th Edn. “Lemuria” by Steiner (Anthrops) “Problem of Lemuira” by Stence (Rider). The drift of continents; by Wegner (Royal Geographical Journal. 1934-36) காண்க.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கெல்லிஸ் எனும், இடத்தில் காணப்படும் எச்சம்மிச்சங்களைக்கொண்டு அறியப்படும் பழங்கற்காலப் பகுதிக்கும் முந்திய நாகரீகக் காலத்தைச் சேர்ந்த (Pre-Chellan Eolithic Culture) சில கண்டுபிடிப்புகளும் உள்ளன. ஆந்திர நாட்டு, நரசிங்கப்பூர் மாவட்டத்தில், நர்மதை ஆற்றங்கரையில் உள்ள, பூத்ரா (Bhutra) எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட, வாழ்க்கை நடைமுறைகளைக் காட்டும், ஓவியம் தீட்டப்பெற்ற விந்திய மலையைச் சேர்ந்த அழுத்தமற்ற கல், அவற்றுள் ஒன்று. அதே இடத்தில், விலங்குகள் சிலவற்றின் எலும்புகளும் காணப்பட்டன. ஐதராபாத் வருவாய்க்கோட்டத்தில் பைதன் நகருக்கு அருகில் முங்கி எனும் இடத்தில், சில விலங்குகளின் எலும்புகளோடு காணப்பட்ட, காய் கனிகளின் உலர்ந்த நறுக்குத் துண்டுகள் இரண்டாவதாம். புத்ரா எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டவை. ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்டனவற்றோடு ஒருமைப்பாடு கொண்டுள்ளன. பர்மா, இலங்கை, அந்தமான், ஜாவாக்களில் கண்டெடுக்கப்பட்டனவோடு, தெளிவான உறுதியான ஒருமைப்பாடு கொண்டுள்ளன. இது, “இயோலிதிக்” (Eolithic) நாகரீகம், அதாவது பழங்கல் நாகரீகம். அன்றைய, அதாவது தொல்லுழிக் காலத்தில் உள்ள எல்லாநாடுகளுக்கும் பொதுவான