பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

45


நடைமுறையில் இருந்த நாகரீகம் என்பதைக் காட்டுகிறது” (“Prehistoric India”) by Panchanan mitra, p.138. History of Pre-Musalman India. Vol I by V. Rangacharya. p.29-32).

தகவாளர், திரு. ஜே. சி. பிரேஸர் (Sir. I.C. Frazer) அவர்கள், ஊழிப்பெருவெள்ளம் (Great Flood) குறித்த கற்பனைக் கதைகளைப் பொருள் கொள்வதில் கீழ்வரும் எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக்கதைகள் உலகின் நனிமிகத் தொலைவில் உள்ள நாடுகளில் வாழும் பல்வேறு வகைப்பட்ட மக்களிடையே பரப்பப்பட்டுள்ளன என்பது உண்மை. இவைபோலும் செய்திகளில், எவ்வளவு சான்று விளக்கங்கள் காட்ட முடியுமோ, அவ்ளவும் காட்டி, இவைபோலும் கட்டுக்கதைகளிடையே, ஐயத்திற்கு இடன்இன்றி ஒருமைப்பாடுகள் இடம் பெற்றிருப்பது, இக்கதைகள், ஒருசார் மக்களிடமிருந்து பிறிது ஒருசார் மக்களிடையே நேரடியாகக் கைமாறியது. ஒருபால் காரணம் ஆகலாம். மற்றொருபால், உலகின் பல்வேறு பகுதிகளில், ஒரே மாதிரியான- ஆனால், முற்றிலும் தன்னியலான ஊழிப்பெருவெள்ளம் அல்லது அதுபோலும் பெருவெள்ளம் ஏற்பட்டமையைக் குறிப்பிட்டுக் காட்டும் இயற்கை விளைவுகள் பற்றிய முன்அனுபவம் காரணமாகலாம். இவ்வாறு இவை போலும் மரபுவழிச் செய்திகள் பற்றிய ஆய்வு, அவற்றின் வரலாற்று, உறுதிப்பாடு பற்றிய எந்த முடிவுக்கும் நம்மைக் கொண்டு செல்வதற்கும் அப்பால், இதிலும், இதுபோலும்: மாறுபட்ட கருத்து உடையவற்றிலும், உண்மை, முழுமையாக, இப்பக்கமோ, அப்பக்கமோ சார்ந்துவிடுவதில்லை. மாறாக, அவ்விரண்டிற்கும் இடையில் எங்கே ஓரிடத்தில் தான் நிற்கும் என்ற உண்மை நிலையை எடுத்துக்கூறி, இருவேறுபட்ட கொள்கைகளுக்காக இருவேறு முனைகளில் நின்று