பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழர் தோற்றமும் பரவலும்


வாதிடுவார்களை நம்ப வைப்பதன்மூலம், அம்மாறுபட்ட விவாதம் சிலநேரங்களில் உண்டாக்கிவிடும் விவாதச் சூட்டினைத் தணிய வைத்தால், பயன் உள்ள செயலைச் செய்யவும் செய்யும். (“Man God and Immortality” page:49-50).

3. திருவாளர் வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின், “மக்ஷிய புராணம்-ஒரு ஆய்வு” என்ற நூலைக் காண்க. பக்கம்: 1-19.

உலகின் தோற்றம், ஊழிப்பெருவெள்ளம் விளைத்த பேரழிவு பற்றிய சுமேரிய நாட்டு வீரப்பெருங்காப்பியம், பூமிதேவியும், பூமிதேவனும், வானுலகக் கடவுளாம் “அணுவும்” (Anu) நீர்க்கடவுளாம் ‘என்கியும்’ (Enki) துணைசெய்ய சுமேரிய நாட்டிற்கே உரிய பழங்குடியினரையே தெளிவாக உணர்த்தும் கருந்தலை மனிதர்களைப் பெற்றனர் எனக் கூறுகிறது. இது தொடர்பாக வணங்கத்தகு தந்தை ஈராஸ் (Rev. Fr. H.Heras) அவர்களின் கருத்துக் குறிப்பு குறிப்பிடத்தக்கது. “எகிப்திய, அல்லது பழங்குடியினரின் மையக் கருமூலமாக, அதாவது. அவர்களின் மூதாதையர்களாக, நாம் இப்போது கருதும் இந்திய நாட்டுத் திராவிடர்கள், ஊழிப்பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்துசமவெளிக்கும், கங்கைப் பெருவெளிக்கும். இடைப்பட்ட, பரந்த நாட்டில் குடிவாழ்ந்த பின்னர், ஆங்குக் குறிப்பாகத் தென் கடல்கரைப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, கருவிகளையும், மனித இனங்களிடை வேறுபாடு உணர்த்தும் தனிச்சிறப்புகளாம் அவர்களின் பழங்கால நினைவுச்சின்னங்கள் எண்ணிலாதனவற்றை விட்டுச் சென்ற, கறுப்பு இனத்தவரின், ஒரு கிளையினராகிய நீக்ரோ இயல்பு இனத்தவரைக் கண்டனர். (“Hamitic Indo-Mediter-ranean Race.” In the New Review. Vol. XIV p. 189-192).