பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

47


4. சென்னை, மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்கள் பழங்கற்கால மனிதனின் எண்ணற்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. தெற்கு, மத்திய மேற்கு இந்தியாவில், பழங்கற்கால மனிதன் வாழ்ந்திருந்தமைக்கான, அறிகுறி எதுவும் தெரிந்த வகையில், இன்றுவரை காணப்படவில்லை. தளபதி குக் (Captain-Cook) அவர்களும், அவர்காலத்துக் கடலோடிகளும் மற்றும் தொடக்க காலத்துப் பிரிட்டானியக் குடியேற்றவர்களும் முதன் முதலாக வருகை தந்தபோது பழங்கற்கால மனிதனின், கடினமானதும், மங்கலான வண்ணம் வாய்ந்ததும், பல்வேறு வடிவங்களில் வெட்டிப் பண்ணக்கூடியதுமான, ஒருவகைச் சந்தனக் கல்லால் செய்யப்பட்டு, இன்றும் கிடைக்கக்கூடிய, படைக்கருவிகள், மற்றும் தளவாடங்களிலிருந்து பெறப்பட்ட உண்மை. அப்பழங்கற்கால மக்கள் பண்பாடு அற்றவர்கள்; ஆனால் காட்டுமிராண்டிகள் அல்லர்; அவர்களின் கல்லால் ஆன. கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த கைவினைப் பொருள்கள், ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கிற்கு அப்பால் உள்ள , தாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்பட்டவைகளைக் காட்டிலும், எண்ணிக்கையாலும் அதிகம்; வடிக்கப்பட்ட முறையிலும் வடிவமைப்பிலும் நனிமிகச் சிறந்தவை என்பனவே. Robert Brwoce Foote. The Foote collection of Indian prehistoric Antiquities Notes on their age and distribution p.8) கேரள நாட்டில், பழங்கற்காலக் காலத்துக் கண்டுபிடிப்புகள் இல்லாமை குறிப்பிடத்தக்கது.

5. திருவாளர் சமன்லால் (Chamanial) அவர்களின் “இந்து அமெரிக்கா” (Hindu America) (Bombay 1940) என்ற நூலினைக் காண்க. அதில், டாக்டர் லுட்விக் ஸ்டெர்ன்பச் (Dr. Ludwrk Sternbach) அவர்களின், தொல்பழங்கால இந்தியாவிலும், அமெரிக்காவைச் சேர்ந்த, பண்டைய மெக்ஸிகோவிலும் இருந்த