பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழர் தோற்றமும் பரவலும்


ஒரே மாதிரியான சமுதாய மற்றும் அறங்கூர் அவைகளும் (“Similar Social and legal Institutions in Ancient India and in Ancient Mexico') என்ற தலைப்புள்ள கட்டுரை இருக்கிறது. (Poona Orienalist, vi P. 43-46). தென் அமெரிக்காவில் கடல் சார்ந்த நாடாம் பெருநாட்டிற்குக் (Peru) கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஸ்பெயின் நாட்டவர் வருகை தரும்வரை, பெருநாட்டு மக்கள், ஞாயிற்றை வழிபட்டு வந்தனர். அந்நாட்டு அரசன், தன்னை, ஞாயிற்றின் குடிவழி வந்தவனாக உரிமை கொண்டாடினான். அந்நாட்டின் தலைநகராகிய (Cuzco) குஸ்கோவில் கட்டப்பட்ட ஞாயிறு கோயிலே, ஏனைய எல்லாவற்றிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது.

6. கடந்த சில ஆண்டுகள் வரை, மிகுதியாகவும் முழுமையாகவும் தெரிந்துகொள்ள, நாம் பெரிதும் விரும்ப வேண்டியதாகிய எகிப்தியரின், தொல்பெருங்கால, நிலைத்த வாழ்க்கைப் பற்றிய நைல்நதியின் கரைக்கு மேலே உள்ள பாலைவன மேட்டு நிலங்களிலும் அதைத் தொடர்ந்துள்ள அடுக்கடுக்கான ஆற்றுப் படுகைகளிலும், தங்கள் பழங்காலக் கருவிகளையும் தளவாடங்களையும் விட்டுச் சென்றிருக்கும் நாடோடிகளின் வாழ்க்கை, ஏறத்தாழப் பழகிவிட்ட கால்நடை மந்தைகளோடும் அவற்றின் நீடித்த வாழ்க்கைக்குக் கோதுமை, பார்லிகளை விளைவித்தலோடு, அப்போதும் பழகிவந்த வேட்டையாடலையும், மீன்பிடித் தொழிலையும் ஆதாரமாகக் கொண்ட நிலைத்த குடியினராய் எவ்வாறு மாறிவிட்டது என்பது பற்றி நம் அறிவு குறைபாடுடையதே. ஆயினும் 1924-25 ஆண்டில், இரண்டு கண்டுபிடிப்புக்கள் பெறப்பட்டன. ஒன்று திருவாளர்கள் ப்ருன்டன் (Brunton) பிலின்கெர்ஸ் பெட்ரியே (Sin Flinders Petrie) ஆகிய இருவரால் மத்திய எகிப்தில் உள்ள “அஸ்யூட்” (Assiut) நகருக்கு மேலே, “கௌ” (Qau) இடத்திற்கு