பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

49


அண்மையில் உள்ள “பதரி” (Badari) எனும் இடத்தில், மற்றொன்று, திருவாட்டி “காட்டன் தாம்ப்சன்” (Miss, Cation Thomson) அவர்களால் எகிப்து நாட்டு, வடக்கு மாநிலத்தில் உள்ள “பாயியும்” (Fayuam) எனும் இடத்தில், இது எகிப்தின், குடியாட்சி நாகரீகத்துக்கு முற்பட்டதான தொடக்கால நிலைகள் பற்றிய புரியாத மொத்தச் சிக்கல்களையும் தீர்க்கத் தக்க,

பெருமளவிலான விளக்கங்களைத் தருகிறது. திருவாளர்கள் ப்ருன்டன் அவர்களும், பெட்ரிக் அவர்களும், நையல் நதிப் படுகை நெடுக உள்ள பல்வேறு நகரங்களில் ஒன்றான, பதரி (Badari) எனும் இடத்தில், ஒரு குடியிருப்பு இருந்ததைக் கண்டுபிடித்தனர். படேரிய இனத்தவரின் குடிவழி வந்தவராகத் தெரியும் இன்றைய எகிப்தியர்கள், இன்றும் அழிந்துபடாமல் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் தொல்குடியினர்களாகிய, திராவிடர் மற்றும் வெட்டர்களோடு, உடலமைப்பில் கருத்தில் கொள்ளத்தக்க தோற்றம் கொண்டுள்ளனர். (James Barike, “A History of Egypt” - From the earliest Times to the end of the XVIIIth Dynasty Page:24-25)

திருவாளர் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம்முடைய “1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள்” என்ற நூலில், தமிழர்களின் தோற்றம் குறித்த மிகமிகத் தீவிரமான கருத்து ஒன்றை முன் வைத்துள்ளார். அதில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த மங்கோலிய இனத்துப் பழங்குடியினர் பலர், இமாலயக் கணவாய் வழியாக, ஆரியர்கள் நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்த பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர். அம்மங்கோலிய இனத்தவருள் பெரும்பான்மையினர், கங்கை நதியின் தொடக்க இடமும், பெரிய வாணிக மையமுமாகிய “தமிலிட்டி” (Tamalitte) எனும் இடத்திலிருந்து தென்னிந்தியாவில் குடியேறினர். இந்நிகழ்ச்சியே, தென்னாட்டுப் பழங்குடியினர். தமிழர் என்ற சொல்லின் தோற்றத்திற்குக்