பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

51


10) இளம் ஆசியா (Asia Minor) நாட்டின் தென்மாநில மக்களாகிய லிலியன் மக்களும், அவர்களின் இனத்தவர்களும், (The Lycian and thier Affinities) என்ற நூலினைக் காண்க. லிஸியா என்ற பெயர் பழமையானது. நம் போலும் பிற கடலோடும் இனத்தவர்களோடு கூடி, எகிப்தியர்களோடு போரிட்டுக் கைது செய்யப்பட்ட, லிசியன் பழங்குடியினரை, எகிப்து நாட்டு “ருக்கு” (Ruku) என்ற இடத்துப் புதைமேடுகளில் காணலாம் என, எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், அப்படியாகவும், வரலாற்றுத் துறைத்தந்தை என அழைக்கப்படும். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர் திருவாளர் எரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் “மில்யாஸில்” (Milyas) அந்நாட்டின் நனிமிகப் பெயர் ஒன்றையும், “ஸொலியிமி” (Solymi) மற்றும் “டெர்மிலொய்” அல்லது “டெர்மிஸை” (Tremiloi or Termilai) களில், மேலும் பழங்காலக்குடி வாழ்நர்களையும் அடையாளம் கண்டுள்ளார். “த்ரேமிலை” (Tremiai) என்ற பெயர் லெஸியன் (Lycian) என மாறுவதற்குக், கிரேக்க நாட்டுக் கற்பனைப் பழங்கதையில் வரும், ‘பெல்லெரோபோன்’ (Bellerophon) என்பானைப் பொறுப்பாளி ஆக்குகிறார். அதே சமயத்தில், அவர் காலத்திலும்கூட, ‘த்ரெமிலை’ (Tremiai) என்ற பெயர், அந்நிலையிலும் வழக்காற்றில் இருந்தது. பிற்காலத்தில், மக்கள் இன ஆய்வாளர்கள், கிரேக்கப் பழங்கதையாகிய ஒடிஸ்லெய் (Odyssey)யின் பாடலாசிரியரும். அந்நூலில் இடைச்செருகல் செய்தாரும், கிரேக்கம் முதலாம் நாடுகளில் வாழ்ந்திருந்த பழங்குடியினராம், பெலஸ்கோயி (Pelasgol) மக்களோடு, வேறு பல்லின மக்கள் வாழ்ந்த, 90 நகரங்களை கொண்ட ஒரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஓரினத்தவராகக் கொள்ளும், கிரீட் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தாருள் ஓரினத்தவராக அடையாளம் காண்கின்றனர். ஆசிய நாட்டில், நாகரீக வளர்ச்சி