பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழர் தோற்றமும் பரவலும்



பெறாப் பகுதியாக இப்பகுதி இருந்தும், மேலைக்கடற்கரை நாடாம் ஆசியா மைனர் போலப் பல மாவட்டங்களைக் காட்டிலும் நனிமிக அதிகமான கல்வெட்டுக்களைக்-கிரேக்க மொழி அல்லாத வேற்று மொழிக்-கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது. அக்கல்வெட்டுக்கள் எண்ணற்றன என்றாலும், அவை, பெரிய ஆராய்ச்சிக்குப் பின்னர்ப், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்றானவாகவும், அறிந்த மொழிக்குடும்பம் எதிலும் சேர்ந்ததாக உறுதியாகக் கொள்ள முடியாதவாகவும் உள்ள தம் மொழியின் தோற்றம் குறித்த விளக்கம் எதையும் தரவில்லை. பலநிலைகளில், லிஸிய இன மக்களின் பழக்க வழக்கங்கள், ஆசியா மைனர் நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள கரிய நாட்டு மக்களின் (Carian) பழக்க வழக்கங்களோடு ஒத்துள்ளன. ஆனால், ஒருநிலையில், அவை தெளிவாக, உறுதியாக வேறுபட்டனவே. லிலிய நாட்டவர் மக்கள் இனஉறவைத் தாய்வழி மதிப்பிடுகின்றனர். குடியுரிமை உள்ள ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆண் அடிமைக்கும் பிறந்த மக்களைச்சட்ட உரிமை பெற்றவர்களாக ஆக்குகின்றனர். ஆனால் குடிஉரிமை பெற்ற ஓர் ஆணுக்கும், ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பிறந்த மக்களுக்கு உரிமையை மறுக்கின்றனர். (The Cambridge Ancient Histroy. Edited by J.B.Bury, S.A. Cook and F.E. Adcock Vol II. The Egyption and Hittite Empires to 1000 B.C. page 9.)

திருவாளர் கனகசபை அவர்கள், தென் இந்தியாமீது படையெடுத்து வந்து நாகர்களை வென்ற மங்கோலிய இனத்தவருள் நனிமிகப் பழமையானவர்கள் மாறர்கள் ஆவர்; அந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அவ்வினத்தின் தலைவன், தென்கோடி இந்தியாவில், நனிமிகப் பழங்காலத்தே குடிபெயர்ந்தவர் தமிழர் ஆதலின், ‘பழையன்’ என அழைக்கப்பட்டான் என்றெல்லாம் கூறியுள்ளார்.