பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழர் தோற்றமும் பரவலும்



‘தமிழரின் தொல்பழம்பொருள் திரட்டு’ Tamilian Antiquary (No 1 , P.12)யைக் காண்க.

12) திருவாளர் ராய் பகதூர் சரத் சந்தர ராய் (Rai Bahadur Sarat Chandra Roy) அவர்கள், மக்கள் இனக் கூட்டமைப்பில் அடையாளம் காண்கிறார். இயலக்கூடிய அனைத்து வகையிலும், தொடக்கநிலையில் முதன் முதலாகக் குடிவந்தவர் மலைநாட்டு ‘செமங்’ (Semangs), அந்தமான் தீவு மின்கோபிகள் (Mincopics) ஆகிய மக்களோடு இன உறவு உடைய, சிறிய, கரிய சுருண்ட தலைமயிர் கொண்ட நெகிரிடோ (Negrito) இனத்தவராவர். அடுத்து வந்தவர் திராவிடர்க்கு முந்தியவர் என்றும், சிலசமயம் ஆஸ்திரேலியரின் ஆதிமுன்னோர் என்றும் அழைக்கப்படும் நீண்ட தலையுடையவர்கள். அவர்கள், வடகிழக்கு அல்லது வடமேற்கு அல்லது கடலுள் ஆழ்ந்துபோன லெமூரியாப் பெருநாட்டிலிருந்து வந்தவர்களாதல் வேண்டும். ‘திராவிடர்க்கு முந்தியவர்கள் எங்கெல்லாம் தோன்றியிருந்தாலும், இந்திய நாட்டு ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் இன அமைப்பு. இந்திய நாட்டுத் தட்பவெப்ப நிலைகளின் ஆதிக்கத்தால் முடிந்த முடிவாக, இந்திய நாட்டவராகவே முடிவுசெய்யப்பட்டு, இந்திய நாட்டின் உண்மையான பழங்குடியினராகின்றனர். இந்தியாவுக்கு, அதன் பின்னர் வந்த, அலை அலையான குடிபெயர்ப்பாளர், தங்களோடு, உழவுத்தொழில் பற்றிய அடிப்படை அறிவு, தாழியில் புதைத்தல், இறந்தவர் நினைவாகச் செப்பனிடப்பெறாக் கற்களை நாட்டுதல், புதிய கற்காலக் கருவிகள், கப்பல் ஒட்டும் அறிவு மற்றும் புதிய மொழிகளைக் கொண்டுவந்த, மத்தியதரைக் கடல் இனத்தவருள் பழைய கிளையினராவர். அவ்வினத்தவரின் முக்கிய பிரிவினர், திராவிட முன்னோர்களாலும், நெகிரிடோ இனத்து மூதாதையர்களில் அழிவுறாது எஞ்சியவர்களாலும்