பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழர் தோற்றமும் பரவலும்



சுமேரிய, மொழியிலும், மற்றும் ஈரான் நாட்டு, எலாமிட் மக்களின் ஆதிமுன்னோர் (proto-Elamite) மொழியிலும் எதிர்ப்படுகின்றது. ஓவிய வடிவு எழுத்து முறையாகிய, பண்டைய இவ்வெழுத்து முறைக்கு, அவை, பொதுமூலம் ஒன்றைக் கருதுகின்றனர். இது, சிலப்பதிகாரத்தில், பண்டப் பொதிகள் மீது எழுதப்படுவதாகக் கூறும் கண்ணெழுத்து அல்லது வேறு அன்று. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி.” (சிலம்பு :5: 1.12)

16) மூன்றாவது மற்றும் நான்காவது அரச இனத்துத் தலைநகராகிய மெம்பிஸ் (Memphis), மேலை எகிப்துக்கும் கீழை எகிப்துக்கும் இடைப்பட்ட எல்லைக்கண் எழுப்பப்பட்டது. (W.J. Perry: The Growth of Civilization p. 97-98. Pelican book)

17) வேத அட்டவணை காண்க. See the Veidc Index part I. p 346-9.

18) அருள் தந்தை ஈராஸ் (Rev. Father Heras) அவர்களின் கருத்து ஈண்டுக் குறிப்பிடல் தகும். எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாட்டு, ஆம் (Ham) என்பான் வழிவந்த ஆமிடிக் (Hamic) இனத்து மூலக்கருவாக அடையாளம் காணும் திராவிடர், ஊழிப் பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்து நதிக்கும், கங்கை நதிக்கும் இடைப்பட்ட பெருநிலப் பரப்பில் குடிவாழ்ந்திருந்தபோது, ஆங்கு. அதிலும் குறிப்பாகத் தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக் கருவிகள் வடிவில், தங்களின் பழைய, எண்ணற்ற அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற கறுப்பர் இனத்து ஒரு கிளையினரான, மலேய நாட்டுக்குள்ள உருவ “நெக்ரிட்டோர்”களை (Negritres) எதிர் கொண்டனர். அவர்களின் வழிவந்தவர்கள், வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் இன்றும் வாழ்கின்றனர். ஆமெடிக் இனத்தவரோடு