பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழர் தோற்றமும் பரவலும்



வகையில் மெருகேற்றும்-கலையினைக் கற்றல், காட்டுக் கொடு, நாய்களை வீட்டு நாய்களாகப் பழக்குதல், மோட்டா வகை நெல்லை விளைவித்தல் ஆகியன பழைய கரடுமுரடான கருவிகள் இடத்தில் புதிய கற்காலக் கருவிகள் தோன்றுவதற்கான, அமைதியான வளர்ச்சிக்கும், பழங்கற்கால நாடோடி வாழ்க்கையிலிருந்து, புதிய கற்கால நிலைத்த வாழ்க்கை முகிழ்த்தற்கும் வழிவகுத்தனவற்றை விளக்க முனைந்துள்ளார்.

“புதிய கற்கால யுகத்தில், விந்திய மலைச்சாரல் சார்ந்த பகுதி நீங்கலாக உள்ள, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கிளை மொழிகள் பேசப்பட்டன: வட இந்திய, புதிய கற்காலத்தவர், திராவிட மொழிக்குடும்ப மொழிகள் என அழைக்கப்படும்மொழிகளோ, கட்டமைப்பில் ஒருமைப்பாடு உடையதும், சமஸ்கிருதம் அல்லது பிராக்கிருத மொழியோடு ஒருமைப்பாடு அற்றதும், தொல் பழங்கால மக்கள் வழங்கிய, தனித்தனிச் சொற்றொடர்களைக் கொண்ட நிலைமொழிகளிலிருந்து படிப்படியாகத் தோன்றியதுமான ஒருவகை மொழிகளைப் பேசினர்’ என மேலும் கூறியுள்ளார். அப்பேரறிவு சான்ற அவ்வெழுத்தாளர் (Journal of the Biharand Orissa Research Society Vol. XXIV, p.39-40).

இந்தக் கொள்கையின்படி, திராவிட இனம், இந்நிலத்துக்கே உரிய தொல்பெரும் பழைய இளம் தமிழர் மற்றும் அவரோடு இனத்தொடர்பான மக்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் வழங்கும் மொழிகள், அவை இப்போது எங்கே பேசப்படுகின்றனவோ அங்கேயே படிப்படியாக வளர்ந்து முழுமை பெற்றவை. தென் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்திய, அங்கேயே இருந்த பண்டைக்கால நினைவுச்சின்னங்கள் பற்றிய விழிப்போடு கூடிய ஆய்வு, தொல்பழங்காலத்தில் நாகரீகம், ஒருகட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து