பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழர் தோற்றமும் பரவலும்



குடியேறிய வெளிநாட்டவர் என்பதற்கான மரபுவழிச் செய்தி எதுவும் தமிழர்க்கு இல்லை. அதற்கு மாறாக, அவர்கள் இம்மண்ணிலேயே பிறந்தவர் என்பதற்கு ஆதரவான அனைத்தும் உள்ளன. திசைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வு, கீழ்த்திசையை உணர்த்தும் கிழக்கு என்ற சொல், கடலை நோக்கித் தாழ்ந்து செல்லும் சாரலையும், மேலைத் திசையை உணர்த்தும் மேற்கு என்றசொல் மேற்கு மலைத் தொடர்ச்சியாம் மேட்டு நிலத்தையும் குறிக்கும். இது இந்தியத் தீபகற்பத்தைச் சார்ந்த மக்களின் கருத்துக்களோடும் நனிமிகப் பொருந்தியுள்ளது. (See V. Rangacharya op. cit. p. 70-7l).

22) தென்னிந்திய மொழிகளின் குடும்பம் ஒரு காலத்தில், ஐரோப்பிய எழுத்தாளர்களால் "தமுலியன்" அல்லது "தமுலீக்" என்ற பெயரால் குறிக்கப்பட்டது. 1856ல் வெளிவந்த, திராவிட அல்லது தென்இந்தியக் குடும்ப மொழிகளின் "ஓப்பீட்டு இலக்கணம்". (A Comparative Grammar of the Dravidian or South-lndian Family of Languages) என்ற நூலின் முதற்பதிப்பில் திருவாளர் டாக்டர் கால்டுவெல் அவர்கள், "திராவிடன்" என்ற சொல் சில காலம் வரை, பெரும்பாலும் தமிழை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு வழங்கி வந்தது. ஆனால், அது சமஸ்கிருத மொழி வல்லுநர்களால், தென் இந்திய மக்களையும் அவர்களின் மொழிகளையும் குறிக்கும் பொதுப்பெயராகவே ஆளப்பட்டது எனக் கூறியுள்ளார். தம் கூற்றிற்குச் சான்றாக, "ஆந்திர-திராவிடபாஷா" என்ற சொல்லைக் குமாரில பட்டர். தமிழ்நாடு, மற்றும் தெலுங்கு நாடுகளில் வழங்கும் மொழிகளைக் குறிக்க ஆண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் பர்னல் (Dr. Burnell) அவர்கள், குமாரில பட்டரின் தமிழ்மொழி குறித்த தெளிவான அறிமுகம், குறிப்பிடத்தக்க ஒன்றாம், "திராவிடம்" என்ற சொல், தமிழ் எனும் பொருள் உடையதாக அவர் கொள்வது