பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

65



யாமைக்குத் திருப்பிற்று. ஆகவே 1863, மே, 30ல் சென்னைக்குத் தெற்கில் உள்ள பல்லாவரத்தில், படை அணி வகுப்புத்திடலில், இருப்புப்பாதையில் பரப்பும் செந்நிறக் கருங்கல் ஜல்லி குவித்து வைத்திருக்கும் குழியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிடையே, உண்மையான, வெட்டிச்செய்யப்பட்ட கருங்கல் கருவிகளைக் காணநேர்ந்தபோது, அது, எனக்கும் பெரிய வியப்பாக இருந்தது என்பதிலும், உண்மையான மனநிறைவையே தந்தது. பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்டவை, உண்மையான பழங்கற்காலத்தைச் சேர்ந்தனவாம் என்ற என் மதிப்பீட்டின் உண்மை, என் நண்பரும், என்னோடு பணிபுரிபவரும் ஆகிய இளநிலை எழுத்தாளர் திருவாளர் வில்லியம் கிங் (William King) அவர்களோடு, சென்னைக்கு 40 கல், வடமேற்கில் உள்ள அட்டரம் பாக்கத்து நீரோடையில் கண்டெடுத்த மிகப்பெரிய, இவைபோலும் கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த பொருள்களால் உறுதி செய்யப்பட்டது. இது 1863 செப்டம்பரில்.

26) திருவாளர் ஜே. டபள்யூ. பிரீக்ஸ் (j.W. Breeks) அவர்கள், நீலகிரி மலைநாட்டில், கற்குவியல் வடிவிலான சவக்குழிகள் பலவற்றைத் தோண்டி, அவைபற்றித், தம்முடைய, முக்கிய நூலாகிய நீலகிரிமலைப்பகுதி, நினைவுச்சின்னங்களும், பழங்குடி மக்களும் மதிப்பீடு ("Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris") என்ற நூலில் விளக்கியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த, திரு. "ரே" (Rea) அவர்கள். திருநெல்வேலியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்திய பழங்காலப் பொருள்களைச் சென்னை அரும்பொருட்காட்சி அகத்தில் குவித்து வைத்துள்ளார். (தென்பால் இந்தியாவில் உள்ள, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய புதையிடங்கள் (Some pre Historic Burial Places in Southern