பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

67



கலைத் தொழில் வேலைப்பாடு அமைந்த பொருட்களும் கூடக் காணப்படவில்லை.

29) பெல்லாரி மாவட்டத்தின், ஆறில் ஐந்து பங்குப் பகுதி, கரடுமுரடான கட்டமைப்பும், இயல்மாறுபடும் தன்மையும் வாய்ந்த, கனிமம், படிகம், வெள்ளை அபிரகம், திண்ணிய கருப்பு அல்லது கரும்பச்சைக் கனிமங்கள் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘கிரானிடோய்ட் (granitoid) பாறைகளாகவும், படிகம் அபிரகம் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘ஜெனிஸ்ஸிக்’ (Gemissic) பாறைகளாகவும் வகைப்படுத்தப் பெறும் முதல் ஊழிக் காலத்தைச் சேர்ந்த அர்ச்சேயன் (Archaean) பாறைகளால் மூடப்பட்டுளது. இவற்றுள் மூத்தது "கிரானிடோய்ட் பாறைகள்” ‘அர்ச்சேயன்’ பாறைகளில் பெரும்பகுதி, இளம் பழுப்பு நிறம் வாய்ந்த இரும்பு கலவாப் பாறைகளாம். தார்வார் பாறைகள், நனிமிகக் கடினம் வாய்ந்த, இரத்தம் போலும் சிவந்த அடுக்குப் பாறைகளாம். சந்தூர் குன்றுகளும் செப்பு மலைத்தொடர்ச்சியும், இரத்தச்சிவப்பு அடுக்குப் பாறைகளைப் பெருமளவில் கொண்டுள்ளன. அவை, இரும்பை அதிகமாகக் கொண்டுள்ளன. சேலத்துக் காந்தம் கலந்த இரும்புப் படிவங்களிலும், அதிகமாக இரும்பைக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள இரும்புப் படிவங்கள் அனைத்தினும் அதிகமான இரும்பைக் கொண்டுள்ளன. இரும்புத்தொழில் இப்போது இறந்துவிட்டது என்றாலும். அண்மைக்காலம் வரை, மெல்லிரும்புச் சுரங்கங்கள் தோண்டப்பட்டுப் பழைய முறையில் உருக்கப்பட்டன. சாந்துர் மலைத்தொடர்ச்சி, பொன்தொழில் அடையாளங்களே அல்லாமல், கண்ணாடி செய்யப் பயன்படும் மாங்கனிஸ் சுரங்கங்களையும் கொண்டுளது. “அர்ச்சேயன்” மற்றும் "தார்வார்" பகுதிகளில், எண்ணற்ற, உறுதி வாய்ந்த பாறைகள் உள்ளன. பொன்கலந்த பாறைகள் நிறைந்த ஓடைகளும், படிகக்கல் கலந்த