பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழர் தோற்றமும் பரவலும்


பாறைகளைக் கொண்ட சுரங்கங்களும் குறிப்பிடத் தக்கவை. இம்மலைகளில் காணப்படும் பொருள், கட்டிடங்கள் கட்டப்பயன்படும் பெரிய சோப்புக்கட்டிகள் போலும் வடிவுடைய் கற்களாம். இவை ஹடகல்லி (Hadagali) மற்றும் ஹர்ப்பனல்லி (Harbanalli) போலும் இடங்களில் உள்ள சாளுக்கிய மரபு சிறிய கோயில்களில், சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. (Bellary District gazetteer p. 13-21). பழங்கற்கால நாகரீகம், தென்னிந்தியாவுக்குப் புதிது அன்று என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அவை, இராஜபுதனத்து நர்மதை ஆற்றங்கரை, ஜைபூர் மற்றும் ஒரிஸா போன்ற இடங்களில், பெரும் எண்ணிக்கையில் உள்ளன. என்றாலும், அவை, பஞ்சாப், இமாலயப்பகுதி, அஸ்ஸாம், மற்றும் பர்மா போன்ற இடங்களில் காணப்படவில்லை.

இரும்பைப் பயன்படுத்தும் முறை, வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்கு வந்ததா அல்லது, அதற்கு மாறான நிலையிலா என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே, முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. (See. Dr. Guha. The Census of India 1931. Vol. I Part III and Prof. P.T.S. Aiyangar's Stone Age in India p.48).

30) உண்மையான இரும்புக் காலத்து மண் பாண்டங்கள். நன்கு பளிச்சிடும் வண்ணங்களும், நன்கு மெருகூட்டப்பட்ட மேல் பக்கமும் கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க, புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் வெளிறிய வண்ணமும், கரடுமுரடான மேல் பக்கமும், சிறிதே ஒப்பனையும் உடையவாம். இரும்புக் காலத்தனவும், அதன், பிற்காலத்தனவுமான இவை போலும் மண்பாண்டங்கள், மைசூர் மாநிலத்து நரசிபுரச் சங்கம் மற்றும் பிரெஞ்சுப் பகுதி மலைக்குன்றுகளிலும், பெல்லாரி மாவட்டத்து மலையம், மற்றும் கர்னூல் மாவட்டத்து “பட்பட்” பகுதியிலும் காணப்படுகின்றன.