பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

69


இரும்புக்காலத்திற்குமுன், பித்தளை நாகரீகக்காலம் இடம் பெறாத நாடு. இந்தியா மட்டும் அன்று. திரு. ஜே.இ. ஓஸில் (J.E.Wocel) அவர்கள் கூற்றுப்படி பால்கன் கடற்கரையை சேர்ந்த யுகோஸ்லோவீகியா நாட்டிற்கு வடக்கே உள்ள ஸ்லாவோனிய (Slavonia) மக்களும், பித்தளை நாகரீகக் காலத்தை இழந்து விட்டுப் பழங்கற்காலத்திலிருந்து, நேரே, இரும்பு உருக்கும் காலத்திற்குச் சென்று விட்டனர். சீனநாடும், பித்தளை நாகரீகக் காலம் என்பதை அறியாது எனச் சொல்லப்படுகிறது.(Brue Foote Indian pre Historic and Proto Historic Antiquities. Page : 25.)

புதிய கற்காலக் கண்டுபிடிப்புகள், பழங்கற்காலத்துக் கண்டுபிடிப்புக்களை அடுத்தடுத்து, அனந்தபூர், கடப்பா, கர்னூல் மற்றும் சில மாவட்டங்களில் பெருமளவில் காணப்படுகின்றன. (அகச்சான்றுக்குக் கடப்பா மாவட்டத்து, கருப்பொருள் களஞ்சியம் (Cuddappa District gozetteer: p. 8-20) காண்க.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வராய் மலைக்குன்றுகள், சீடெட் மாவட்டங்கள். ஐதராபாத், மற்றும் பரோடா ஆகிய இடங்களில் புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் நனிமிக அதிகமானவற்றை நாம் எதிர் கொள்கின்றோம். திருவாளர் புரூஸ் புட்டே அவர்கள் வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்டனவாய மண்பாண்டங்களைத் தாம் கண்ட 127 இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 56 இடங்கள், புதுக்கற்கால இனத்தைச் சேர்ந்தனவற்றைத் தந்துள்ளன. 2 இடங்கள், புதுக் கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறும் காலத்தைச் சேர்ந்தவை. 60, இரும்புக் காலத்தன. ஏனை இரும்புக் காலத்துக்குப்பிற்பட்ட காலத்தவை.

31) சுடுதல், முக்கியமாக வேதவழக்காம், ஆனால் தென்இந்தியாவில், அது, நுழைக்கப்பட்ட பின்னரும், ஏனைய