பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில்
தமிழர்பண்பாட்டுப் பரவல்

இன்று இரவு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே, தென்னிந்தியாவிலிருந்தும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நிகழ்ந்த பண்பாட்டுப்புடைபெயர்ச்சிகளை எடுத்து விளக்க நான் பெருமுயற்சி மேற்கொள்வேன். அது செய்வதன் முன்னர்ப், பண்டைய உலகின் குறைந்தது, அப்பழந்தமிழர்கள் உணர்ந்திருந்த, அவர்கள் இடைவிடாப் போக்குவரத்து உணர்ந்திருந்த அந்த உலகின் நிலஇயல் பற்றிய நிலைகளை, உங்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மேற்கில், ஆப்பிரிக்கா, மற்றும் எகிப்து, தென்மேற்கு ஆசியாவில் டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் கீழ்ப்பகுதிப் பள்ளத்தாக்கில் கி.மு. 2700 முதல் 350 வரையும் சிறப்புத்திருந்த பழம்பெரும் பேரரசின் தலைநகராகிய பாபிலோனியா, அதை அடுத்து இருந்த நகராகிய கமர், மற்றும், மேற்கு ஐரோப்பியாவின் இரான் நாட்டுப் பர்ஷியா ஆகியவற்றையும், கிழக்கே சீனர் மற்றும் பர்மாவையும் தெரிந்திருந்தனர். தென்கிழக்கே, உள்ள கடலிடைத் தீவுக் கூட்டங்கள், ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடலிடைத் தீவுக் கூட்டங்களாகிய பொலினிலியாக்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது. வடஇந்தியா மற்றும் இலங்கையும் தெரிந்திருந்தன.

உங்களின் ஆய்வுக்காக, உங்கள் முன் நான் எடுத்து வைக்கும் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவு, அதாவது தென்னிந்தியாதான், இன்று நாம் அழைக்கும் மத்திய தரைக் கடற்பகுதி வாழ்