பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

73


இனத்தவரின் (Mediterranean Race) உண்மையான தாயகம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுமாயின், குறிப்பிடத்தக்க இயல்பான முடிவு, மேற்கு ஆசிய நாடுகளின் பண்பாட்டிற்கும், எகிப்தியப் பண்பாட்டிற்கும், கீழைநாட்டு மூலத்தைக் கொடுப்பதாக அமையும். (De Morgan, L’ Epgypte. Asieaux temps ante historiques, J.A. cc III 1923. p. 117-159. La Prehistoric Orientala vol I and II paris- 1925-6).

காலத்தால் முந்திய வரலாறுகள் பற்றிய ஆய்வில், பிழைபடாத் துல்லிய முடிவுகளை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடத்தக்கவாம். தென் இந்தியாவுக்கும், மெசபடோமியாவுக்கும் இடையில், தென்கடல் மற்றும் இருவழிகளாலும் தொடர்பு இருந்தது. தொடக்ககாலக் கடல் வழிச்செலவு அனைத்தும் கடல் ஓரமாகவே நடைபெற்றன. தென்னிந்தியப் பண்டைத் திராவிடர்கள், வீரம், மற்றும் அறிவு நிலைகளில் புதியன காணும் ஆர்வம் உடையவர். அவர்கள், தக்ஷிணாபத செல்வழி மூலம், இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். இந்தியாவின் வடமேற்கில் உள்ள சிந்துவிற்கு அவர்கள். கடல் வழியாகவே சென்றிருக்க வேண்டும். புதியன, அதாவது புதிய இடங்களைக் காணும் அவர்கள் ஆர்வ நோக்கம், நாடு பிடிக்கும் வெற்றிகள் அல்ல. மாறாகப் புதிய வாணிக நிலையங்களைக் காண்பதே. அவர்களின் வாணிகப் பொருள்களும், அன்று வரை தெரிந்திருந்த உலகில் பெரியதேவை இருந்தது. அவை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மிக முக்கியமான நகரங்களில் இந்த மக்கள் நிலைத்த குடியினராகி, ஆங்குத் தம் மொழிகளையும் பண்பாடுகளையும் புகுத்தினர். சிற்றாசியாவுக்கும் (Asia Minor) மத்தியதரைக்கடலுக்கும் போகும் வழியில், எகிப்துக்குச்செல்லும் ஒருவழி, அரேபியன் கடலைக் கடந்து செல்வதாம், என்றாலும்,