பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழர் தோற்றமும் பரவலும்


பண்டைய சுமேரிய நாட்டிற்குச் செல்லும் மற்றொரு வழி, பர்ஷிய வளைகுடாவுக்கு மேலே, நம், திருவாளர் “பிரோசஸ்” (Berosus) அவர்கள் மேற்கோள் காட்டும் ஒரு மரபு வழிச் செய்தி, அதாவது “ஒனெய்” (Oanns) என்னும் மனிதமீன், தன்னோடு நனிமிக நாகரீகக் கலைகளையும் கொண்டு, பர்ஷிய வளைகுடாவரை நீந்தி வந்தது என்ற செய்தி, (குறிப்பு.1) நாகரீகங்களின் பிறப்பிடம் இந்தியா. ஆகவே, அவ்விந்தியாவிலிருந்து, பழைய “சுமர்” (Summar) நாட்க்குக் கடல் வழிப்பயணம் இருந்தது என்ற நம் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, நல்லதொரு சான்றுத்திட்டமாம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களையே அல்லாமல், ஆடம்பர வாழ்க்கைக்காம் பொருள்களையும் ஏற்றிக் கொண்டு பர்ஷியா வழியாக, சுமேரியாவுக்குச் செல்லும் வணிகப் பெருங்கூட்டம், இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்தும் அடுத்தடுத்துச் செல்வதை நாம் காணலாம்.

நமக்கென ஒரு வரலாறு இருக்கிறது என உரிமை கோரும் நாளுக்கு அணித்தானதான கி.மு. பத்தாவது நூற்றாண்டில், உலகப் பெருவாணிக நிலையமாக இருந்தது, அரேபியாவின் தென் மேற்கு மூலையில் உள்ள, கிறித்துவ விவிலிய நூலில் “ஷீபா” என அழைக்கப்படும் “சபா” எனும் நகராகும். (Saba) இந்த இடத்தில்தான் இந்திய வணிகப் பெருமக்களால் பண்டப் பொதிகள் இறக்கப்பட்டன; இங்குதான் எகிப்தியர்களும், இன்றைய சிரியாவும், பாலஸ்தீனமுமான பொய்னிலிய நாட்டவரும் (Phoenicians) (குறிப்பு 2) இந்திய வணிகர்களைச் சந்தித்துத் தங்கள் பண்டப் பொருள்களை இந்தியப் பொருள்களுக்கு மாற்றிக்கொண்டனர். சபாநகரத்து வணிகர்கள், இடைத் தரகர்களாகச் செயலாற்றி, நடைபெறும் பல்வகை வாணிகங்களில் கிடைக்கும் அங்கத்தின் பெரும்பகுதியைத் தமதாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது செல்வாக்குக்கு