பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vii



முன்னுரை
திருவாளர் டாக்டர். கே.ஆர்.அனுமந்தன் அவர்கள்

சென்னைப் பல்கலைக்கழக முதுபெரும் ஆராய்ச்சிப் பேரறிஞர் உயர்திரு. டாக்டர் வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பிற்கு ஒரு முன்னுரை எழுத நான் கேட்டுக் கொள்ளப்பட்டதை மிகப்பெரிய பெரும் பேறாக மதிக்கின்றேன். "தமிழ் இலக்கியம், மற்றும் வரலாறு பற்றிய ஆய்வு" (Studies in Tamil Literature and History), "சிலப்பதிகாரம்", "மத்சயபுராணம்" போலும் பொருள் செறிந்த நூல்கள் மூலம், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் தென்னிந்திய வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும், திருவாளர் தீக்ஷிதர் அவர்களுக்குத் தனியே அறிமுகம் எதுவும் தேவை இல்லை. தமிழ்மொழி பற்றிய ஆய்வினை, அது, இன்னமும் குழந்தைப் பருவ நிலையில் இருக்கும் போதே, அன்போடு பேணி வளர்த்த முன்னோடிகளில், இவரும் ஒருவர் என்பது நன்கு தெரிந்த உண்மை.

இப்புத்தக வடிவில், மறுவலும் வெளியிடப்படும் இவ்விரு சொற்பொழிவுகளில், வரலாற்றுப் பேராசிரியர்களை, இன்று வரையும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதான, திராவிடர் தோற்றம் குறித்த புரியா புதிரைப் புரிய வைக்க முயன்றுள்ளார். இச்சொற்பொழிவுகள் நெடுகிலும், திராவிடர் அல்லது அவர் முதலிடம் தரும் இருபெயராம் பழந்தமிழர் என்பார். இம்மண்ணுக்குரியவராவர் என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்துள்ளார். தம் கருத்தை உறுதிசெய்ய, அவர் தொல்