பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழர் தோற்றமும் பரவலும்


நாணயங்கள் இரண்டு பாய்மரக் கப்பல்கள் சின்னல்களையே கொண்டுள்ளன. ஒற்றைப் பாய்மரக்கப்பல் சின்னம் இல்லை என்பதையும் இடையில் குறிப்பிடுகின்றேன். அவை, கடல் வாணிபம் இருந்ததை அறிவுறுத்துகின்றன. அதே கால அளவில், தென்இந்தியா, மலேசியாவுடனும், வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. (குறிப்பு. 7) இந்நாடுகள் உடனான கடல் வாணிகத்தின் பயன், பசிபிக் நாட்டுத் தென்னை, கள் இறக்கல், வெற்றிலை தின்னல் ஆகியன நுழைதலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எது எப்படி ஆயினும், கூறிய அனைத்தும், சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் பனைமரக்கள், அக்கால மக்கள், நனிமிக விரும்பிய ஒன்றாம். தென்னிந்தியத் தேவாங்க இனத்து நெசவாளர்கள், விஸ்வகர்மாக்கள், கோவை மாவட்டத்து ஒக்கியர்கள் (Okkyians) திருவாங்கூர் நாட்டுப் பிஷரோடிகள் (Bisharodis) மற்றும் நீலகிரியைச் சார்ந்த இருளர்கள் ஆகியோர்களிடையே இன்றும் வழக்காற்றில் உள்ள, இறந்தார் உடல்களை, உட்கார்ந்த நிலையிலேயே புதைக்கும் முறை பொலினீஷியாவில் உள்ளது: தென்னிந்தியாவில் உள்ள நீண்ட பிடியில் பொறுத்தப்பட்ட மரம் செதுக்கும் வாச்சிற்கு இணையான ஒன்று, பொலினீஷியா மற்றும் ஆர்ச்சிபிலகோத் தீவுகளில் உள்ளன. தொடக்க காலம் படைக்கலமாகிய, தானே தாக்கித் திரும்பும் ஆயுதமும் (Boomerang) அதே வழியில், தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பானதும் தென்னிந்தியப் பழைய கடல் மாலுமிகளால் கொண்டு வரப்பட்டதுமாம். (குறிப்பு. 8) மத்திய இந்தியாவில் உள்ள பஹில்லர் (Bhils) எனும் இனத்தவர், வளைந்த வடிவுடைய தானே தாக்கித்திரும்பும் படைக்கலங்களை ஆளும்போது, மதுரை மாவட்டத்து மறவர்கள், பிறைத்திங்கள் போலும் வடிவுடையதும், முனையில் குமிழ் போலும் கைப்பிடி உடையதுமான அப்படைக்கலத்தைக் கொண்டுள்ளனர். இதில் வியப்பிற்குரியது