பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

79


என்னவென்றால் அதே படைக்கலக் கருவி, ஆப்பிரிக்கா நாட்டு நைல் நதிப் பள்ளத்தாக்கிலும் உளது. தென்னிந்தியா மூலமாக அல்லது. இது எகிப்துக்கு எவ்வாறு சென்றிருக்க முடியும்? பெரும்பாலும் கற்காலத்திலிருந்தே, தென் இந்தியா எகிப்தோடு தொடர்பு கொண்டிருந்தமைக்கான, மறுக்க முடியாத அகச் சான்றுகளுள் இதுவும் ஒன்று. எகிப்தில் முடியாட்சி முறைக்கு முற்பட்ட காலத்தில், தென்இந்திய மட்பாண்டங்கள் இருந்தமையினை, முன்பே சுட்டிக்காட்டியுள்ளேன். ஈண்டு நாம் அறியக்கூடியது என்னவென்றால் எப்போதெல்லாம் தன் தேவைகளுக்குப் பொருந்துமோ, அப்போதெல்லாம் வேற்று நாட்டுப் பண்பாடுகளை மேற்கொண்டுள்ளது தென்னிந்தியா என்பதே. வெளி உலகிற்கு நிறையக் கொடுத்திருக்கும் அதே நிலையில், ஆங்குள்ள சிலவற்றைத் தானும் எடுத்துக் கொண்டுளது.

வரலாற்றுத்துறை மற்றும் வாணிகத்துறை தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டிருக்கும், சுமத்தரா, பாலி, போர்னியோ, மலையா, சயாம், ஜாவா, சம்பா, கம்போடியா, மற்றும் கிழக்கிந்தியத் தீவுக் கூட்ட நாடுகள் ஆகிய கிழக்கிந்தியத் தீவுகள், இந்தியாவால் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவால் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இந்நாடுகளில் பெரும்பாலனவற்றில் கிறித்து ஆண்டு பிறப்பதற்கு முன்பே, இந்துக்களின் முறையான குடியிருப்புகள் இருந்தன (குறிப்பு, 9) காண்க. அமெரிக்க நாகரீகம் அதாவது ஒரு அமெரிக்க நாட்டவராகிய மாயர் என்பாரின் பண்பாடு, கிழக்கிந்தியத் தீவு மக்களால் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். இம்முடிவை நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அதே நிலையில் “இந்து அமெரிக்கா” (Hindu America) என்ற அண்மைக்கால ஆய்வு, நனிமிகப் பழங்காலம் தொட்டே, இந்தியாவுக்கும்