பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

81


அமர்த்துகிறது. கம்போடியத் தலைநகர்க்கு அணித்தாக உள்ள “அங்கோர் வாட்” (Angkor Vat) எனும் இடத்தில் திராவிடக் கலைத்தொழில் அமைந்து விஷ்ணு கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சம்பா நாட்டு முதல் அரச இனம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே, தென்னிந்தியர்களால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. வாணிபத் தொடர்பை அடுத்து, அரசியல் வெற்றிகள் தொடர்ந்தன. ஆகவே, இந்தச் செய்தி மறுக்க முடியாத ஒன்று.

சைனா

தென்னிந்திய வாணிபத்தின் ஒருபகுதி, பெரும்பாலும் தொடக்க காலத்திலிருந்தே சைனாவோடு நடைபெற்று வந்தது. தொடக்ககால இவ்வாணிபத்திற்கு ஆதரவான அகச்சான்றுகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு வரும் போது, நாம் உண்மையான அடிப்படையில் நிற்கின்றோம். கி.பி. நான்கு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை, இந்தியாவுக்கும் சைனாவுக்கும் இடையில், முறையான கடல்வழி வாணிகம் இருந்து வந்துளது. (Yule Cathay and the way Thither) “சீன தேசமும் அதற்கு அப்பாலும்”, சீன நாட்டுத் தட்டையான அடிப்பகுதியுடைய மரக்கப்பல்கள் வந்து செல்லும் முக்கிய இடங்கள், காலிகட், கொய்லோன், நாகப்பட்டினம் மற்றும் மகாபலிபுரம் முதலாம் கடற்கரைப் பட்டினங்களாம். பல்லவ நரசிம்மவர்மன், சீன வர்த்தகர்கள், சைனமுனிவர்களுக்காக, நாகப்பட்டினத்தில், “சீன பகோடா” (China Pagoda) என்ற சீனக் கோயில் ஒன்றைக் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் கட்டினான். இது, தென்னிந்தியப் பேரரசர்களின் சமய ஒருமைப்பாட்டு நிலையைக் காட்டுகிறது. இதனினும், சிறப்பானது. கிறித்துவ ஆண்டு