பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழர் தோற்றமும் பரவலும்


தொடக்கத்திலிருந்தே, புத்தமதக் கோட்பாடுகளை எடுத்து விளக்கவும், அம்மதத்தை நடைமுறையில் பரப்பவும், சீனாவுக்குச் சென்ற தென்னிந்திய பெளத்த முனிவர்களின் செல்வாக்குதான். “இயான் சியாங்” (Huien Tsiang) வருகை தந்தான். இட்சிங் (ltsing) அவர்காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த பல பயணிகளைக் குறிப்பிடுகிறான். கி.பி. ஆறாவது நூற்றாண்டு போலும் தொடக்க காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்களுள், போதிதர்மர் எனும் சமயப் பெயர் பூண்டு, சீனாவுக்குச் சென்று, சீனமொழியில். “ஜென்” (Zen) (குறிப்பு 11) என அழைக்கப்பெறும் தத்துவத்தைப் பிரசாரம் செய்தவனாகிய, காஞ்சியைச் சேர்ந்த சிற்றரசனும் ஒருவன், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டை நோக்கினால், கி.பி. 1374 ஆம் ஆண்டில், விஜயநகர அரசன் முதலாம் புக்கன், அப்போது சீனப் பேரரசனாக விளங்கியவனுக்கு நட்புறவுத் தூது ஒன்றை அனுப்பியதைக் காணலாம். இவ்வகையால், சீனாவுடனான தென்னிந்தியப் போக்குவரத்து, வாணிகத் தொடர்பானது மட்டும் அன்று; பண்பாட்டுத் தொடர்பானதும் கூட.

இலங்கையும் தென்னிந்தியாவும்

கடலுள் அமிழ்ந்து போன பழைய பெருநிலப் பரப்பிலிருந்து இலங்கை துண்டிக்கப்பட்டுவிட்டது என்றாலும், இலங்கையோடு தென்னிந்தியா கொண்டிருந்த உறவு, துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தே வந்தது. (குறிப்பு: 12) இராக்கதர் ஆட்சி, இலங்கையிலிருந்து, தக்ஷிணம் முழுமையும், மற்றும் தென்னிந்தியா முழுமையும் அதற்கு மேலும், கொள்ளைக்காரர்களாகிய இராக்கதர்களிடமிருந்து, அமைதி