பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

83


விரும்பும் நாட்டு மக்களைக் காத்தற் பொருட்டுத் தன் இளம்வயது மகன் இராமனை அனுப்புமாறு தசரதனை, விஸ்வாமித்திரர் வேண்டுமளவு, தசரதன் நாடாகிய அயோத்திவரையும் பரவி இருந்தது. இலங்கை மீது இராமர் எடுத்த படையெடுப்பும் அதன் பின்விளைவுகளும் அனைவரும் அறிந்ததே. அப்பழங்குடியினர்களின் அழியா உயிர் வாழ்க்கை, கி.மு.300ல் கங்கைக்கரைப் பேரரசன் சீயபாகுவின் மகன் விஜயன், இலங்கையில் அடியிடும் வரையும் இருந்தது. இவர்கள் உலக அரங்கிலிருந்தே மறைந்துவிட்ட ராக்கதர்கள் ஆவர். இலங்கையில் உள்ள வெட்டர்கள் (Veddhas) பெரும்பாலும், பண்டைய இராக்கதர்களின் வழிவந்தவராதல் கூடும். புத்தமதம் தென் இந்தியாவுக்கு இலங்கையிலிருந்து கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் வந்ததாக நம்பப்படுகிறது. (குறிப்பு.13) இக்காலம் முதல் நட்புறவு இருந்ததாகத் தெரிகிறது. சோழ அரசன் கரிகாலன், தன் பாசனப் பணிக்காக இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பணியாளர்களைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தினான் எனச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசன் கஜபாகு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், செங்குட்டுவன், சேரர் தலைநகரில், பத்தினிக் கடவுளுக்கு எடுத்த விழாவிற்கு வந்திருந்தான் எனச் சொல்லப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டு வரை, அமைதியான நட்புறவு இருந்து வந்துளது. இக்காலம் முதல் 8வது நூற்றாண்டின் கடைசி வரை, பல்லவர்கள் இலங்கைமீது, பலமுறை படையெடுத்து வெற்றி கொண்டான். இது பாண்டியர்களால் தொடரப்பட்டு, இலங்கை அரசன் முதலாம் சேனன் காலத்தில் இலங்கைத் தலைநகர் கைப்பற்றப்பட்டது. ஆனால் இரண்டாம் சேனன் தன் பங்காகப் பாண்டியர் தலைநகர் மதுரையை அழித்தான். பராந்தக சோழன், மதுரையை வெற்றி கொண்டபோது, இராஜசிம்ம பாண்டியன், இலங்கையில் அடைக்கலம் புகுந்தான். இலங்கை மீதான சோழர் படையெடுப்பு ஒன்று இருந்தது. ஆனால் வெற்றி