பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





இராமலிங்கரின்
மனிதநேயம்

இராமலிங்க அடிகளாரைப் பாரதி தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று அழைக்கிறார்.

ஆனால், சைவப் பெரியார்கள் அவரைச் சைவ சித்தாந்தி எனச் சித்திரித்துக் காட்டுகின்றனர். ஆறுமுக நாவலர் போன்ற சித்தாந்திகள் நாக்கில் நரம்பின்றி இராமலிங்க அடிகளாரைப் பற்றித் திட்டியதும் அவரது அருட் பாவை மருட்பா வென்றதும் இன்று அவர்களுக்கு மறந்து போய் விட்டது. இன்று வள்ளலார் விழாக்கள் சைவ சமயவாதிகளாலேயே, சைவ சமயத் தத்துவச் சார்போடு கொண்டாடப்படுகிறது.

பாரதி சமூகச் சீர்த்திருத்தவாதி, சமரச ஞானி, மனிதாபிமானி என்று வள்ளலாரைப் போற்றினார். இவையனைத்தையும் மறைத்து சைவசித்தாந்த சிறைக்குள் அடிகளாரை அடைத்துப் பூட்டிவிடச் சிலர் முயலுகிறார்கள்.

இராமலிங்கரின் உண்மை வரலாறு நமக்குத் தெரியாது. அவரது வாழ்நாளிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அவரது சீடர்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவரது பாடல்களிலிருந்தும், நம்பத் தகுந்த ஆதாரங்களிலிருந்தும் அவர் இளமையில் தமிழறிவு மிக்கவராயிருந்தாரென்று தெரிகிறது. அவரது பாடல்கள் ஆறு திருமுறைகளாகக் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் ஐந்து அவரது சைவ சமயப் பற்றைக் காட்டுகின்றன. அவை பிற மதங்களின் மீது அவருக்கிருந்த குரோதத்தையும் காட்டுகின்றன. ஆனால் மனித வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்த அடிகளார் மனிதரது துன்ப துயரங்களை உணர்ந்து மனமுருகி அவற்றைப் போக்க எண்ணினார். முக்கியமாகத் தாது வருஷப் பஞ்சம் அவர் உள்ளத்தை விசாலமாக்கியது. சாவும், துன்பமும்

96