பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சமூகக் கதைப்
பாடல்கள்

சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கெளதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.

முத்துப்பட்டன் கதை

முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து ககத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.

முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச்

126