பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை. கடைசியில் வஞ்சகத்தால் அவனைக் கொன்றுவிட்டனர்.

சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான். என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.

கெளதலமாடன் கதை

மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கெளதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும், நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.

கெளதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்திவந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான். ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது கெளதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது. தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன்

129