உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றழைக்கிறோம். இம் மந்திரம்தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு, மனிதன் மந்திர முறைகளினால் இயற்கையை வசப்படுத்த முயன்றான். இயற்கையை அறிய புறவய முறைகள் தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்று விட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது. இம்மந்திரத்தின் எச்சமே பாவை நோன்பு. தங்கள் உடலை வருத்தித் தூய்மையாக இருந்தால் பாவையும் வரந்தரும் என்ற ஆயர் மகளிரது நம்பிக்கையே திருப்பாவையில் கவிதா ரூபத்தில் வெளிப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த ஒரே ஒரு சான்று காட்டுவோம். மந்திர முறையில், இயற்கைச் சக்திகளை அழைத்து மனிதன் கட்டளையிடுவது போல் சொற்களை மறுபடி உச்சரிப்பது வழக்கம். தெய்வத்தை வேண்டிக் கொள்வதென்பது மனிதன் தன் உடலில் சக்தியை வரவழைக்கவே. சக்தி பெற்றதாக அவனுக்குத் தோன்றியதும் இயற்கைச் சக்திகளை நோக்கி மனிதன் கட்டளைகளைப் பிறப்பிப்பான். இவ்வாறு ஆயர் மகளிர் மழையைப் பார்த்துக் கூறுவதைக் கேளுங்கள்:



‘தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழை போல் வாழ
உலகினில்
பெய்திடாய், நாங்களும்;
மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்;’

‘நாங்கள் வாழ நீ பெய்’ என்ற மந்திர மொழியாக அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

மழை பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் பாவைக்கு அவர்கள் செய்யப்போகும் விழாச் சிறப்புக்களைப் பற்றியும் முன்கூட்டியே ஆயர் மகளிர் சொல்லுகிறார்கள். அதுதான் அறுவடைத் தினத்தன்று அவர்கள் பாவைக்குச் செய்யப்போகும் சிறப்பான விழா.



கூடாரை வெல்லும் சீர்க்
கோவிந்தா! உன்தன்னைப்




13