பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தங்கள் தாய்மாரருகில் நின்று நீராடுகிறார்கள். நீராடும்போது வையையை நோக்கிப் பாடுகிறார்கள்.

‘வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாடல் ஆடல் மழுபுலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பில் அவர், அவர்
தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
தாயருகா நின்று தவத்தை நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி!’

(பரிபாடல்-11)
அவர்கள் வையையை வாழ்த்தும்போது தங்கள் வேண்டுகோள்களையும் வையையிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

‘நீ தக்காய், தைந்நீர் நிறம் தெளித்
தாய்’ என்மாரும்,
கழுத்து அமை கை வாங்காக்
காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக! என
வேண்டுதும்’ என்மாரும்,
’கிழவர் கிழவியர் என்னாது
ஏழ் காறும்
மழ ஈன்று மல்லற் கேள்
மன்னுக!’ என்மாரும்,

(பரிபாடல்-11)
சிறந்த கணவனைப் பெறவேண்டுமென தை நீராடும் மகளிரின் வேண்டுகோள் வையையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

எனவே, பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவர்கள் வாழ்க்கை, விழாவன்று மட்டும் வளம் பெற்று விளங்காமல் என்றும் வளம்பெற வேண்டும் என்பதே அவர்கள் ஆர்வம். மந்திர மொழியின் மூலமும்,


17