பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவம் செழிப்பை அடையாளமாக உணர்த்தும். இதில் இரண்டு கலைப்போக்குகள் கலந்து பரிணமித்து முழுமையடைவதைக் காணலாம். இதுபோலவே உடைகளின் கரைகளிலும், சுவரில் எழுதிய கொடி சித்திரங்களிலும் இக்கலப்புப் போக்கைக் காணலாம். ஆனால் இக்கலை இணைப்பு மிகப்பழங்காலத்திலேயே தோன்றி விட்டது. குஷானர் காலகட்டத்தில் நிலவிய கலை பக்தி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாராம்சத்தில் திராவிடர் கலையாகும். புத்த கயாவிலுள்ள ‘இந்திர சாந்தி’ உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றியமைத்ததின் விளைவாகும். குப்தர்காலப் புத்தர் படிமங்களும் எலிபான்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும், பல்லவர் காலத்து லிங்கங்களும், நடராஜர் மூர்த்தங்களும், இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. இவை யாவும் இந்திய சிற்பக் கலையின் ஆழ்ந்த தத்துவத்தை வெளியிடுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் அடையாள பூர்வமானதாகும். வழிபடுபவன் தனது உணர்வின் உருவமாகவும் சிலையைக் காண்கிறான். வரலாற்றுக் கால இந்தியக் கலையிலும், தத்துவத்திலும், புலனுணர்விற்கும், அகத்துறவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தீர்த்து ஒன்றுபடுத்த நிகழ்ந்த நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் இவ்வாறாக ஒன்றி உருமாறிப் புதியதொரு முழுமையான கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இவை யாவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னேரே நிகழ்ந்து வளர்ச்சியுறத் தொடங்கி விட்டன. உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன்னரே ஆரியத் திராவிட பண்பாட்டுக் கலப்பு முழுமை பெற்று விட்டது.




32