பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘ஹினாயன பெளத்தம்’ ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. ஜீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது. [1]

இவை யாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கௌடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.

இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?

  1. சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
  2. பேரரசு தோன்றத் துணை செய்தன.
  3. வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
  4. குழுக்களையும் சாதிகளையும் ஒரளவு ஒன்றாக இணைத்தன.
  5. மொழி வளர்ச்சிக்கு உதவின.
  6. புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
  7. ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
  8. இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.




43

  1. காவியக் கதைத் தலைவர்கள் - நா.வா. தாமரை