பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மொழிப் பற்றும்,
மொழி வெறியும்

தமிழ் மொழியுணர்ச்சியும் பிரதேசப் பற்றும் தமிழிலக்கியத்தில் எவ்வாறு உருவாகியுள்ளன என்று டாக்டர் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்ச்சர்’ ஜனவரி-1 மார்ச்சு இதழில் ஆராய்ந்துள்ளார்கள். அக்கட்டுரையில் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வுணர்ச்சி வளர்ந்து வந்த வரலாற்றை விவரித்துள்ளார்.

தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன.

இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென்மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும்.

இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு பரப்பியது. அதன் விளைவினால் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டுப் பற்றுக்கும். இந்திய நாட்டுப் பற்றுக்கும் முரண்பாடு எழுந்தது. இதன் குரல்களாக தேசீய இயக்கக் கவிகளான பாரதியும், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும் ஒலித்தார்கள். உரை நடையில் இம்முரண்பாட்டைத் திரு.வி.க. வின் கட்டுரையில் காணலாம். சேதுப்பிள்ளையவர்கள் இந்திய நாட்டின் கலாசார ஒருமையைப் பல கட்டுரைகளில் விளக்கியுள்ளார்கள்.

இராமலிங்க பிள்ளையும், சேதுப்பிள்ளையும், இந்தியால் தமிழுக்கு அழிவு நேராது என்று கருதுகின்றனர். தமிழின் உரமும் வலிமையும். எம்மொழித் தாக்குதலையும் எதிர்த்து நிற்க வல்லதென அவர்கள் கருதுகிறார்கள்.

தற்காலக் கவி பரம்பரை தி.மு.க. வினுடையது. பாரதிதாசன் அதன் மூலவர். கண்ணதாசனும், முடியரசனும் அவர் வழித்தோன்றல்கள். திராவிடநாடு என்னும் பிரதேச உணர்வை வளர்க்க

48