பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்பாட்டின் ஒருமையையும் உணர்தல் அவசியம் எனப் பாரதி கண்டார்.

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,
இதைத் தொழுது படித்திடடி பாப்பா’
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.’

என்று தமிழுணர்வூட்டும் பாரதி இந்திய ஒருமைக்கு அது விரோதமல்ல என்றும் பாடுறார்.

‘முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்’
செப்பு மொழி பதினெட்டுடையாள்,
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.’

தேசிகவிநாயகம் பிள்ளையும் பாரதியின் உணர்வில் ஒன்றி நிற்பதைக் காண்கிறோம். நாமக்கல்லாரும் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஒன்றிற் கொன்று முரண்பட்டதாகப் பார்க்கவில்லை.

இவையனைத்தையும் சுட்டிக்காட்டி இந்திய நாட்டுப்பற்றுடைய கவிகளுக்கு தமிழ் மொழி உணர்வு முரண்பட்டதோர் உணர்ச்சியென்றும், இவையிரண்டிற்கும் பாலம் அமைக்க அவர்கள் முயலுவதாகவும் தனிநாயக அடிகள் கூறுகிறார்.

புதிய மறுமலர்ச்சி சுந்தரம் பிள்ளையின் தமிழ் வாழ்த்துப் பாடல் தோன்றிய காலத்திலிருந்து துவங்குவதாக அடிகள் கூறுகிறார். ‘கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழ்தான் தாய். இத்தனை மொழிகளைப் பெற்றெடுத்தும், தமிழ் ஆரியம் போல் முதுமையடைந்து அழிந்தொழிந்து போகாமல் இளமையோடு நிலவுகிறது. இத்திறத்தை எண்ணித் தமிழை வாழ்த்துவோம்’ என்பது அப்பாடலின் கருத்து. தமிழ்

55