பெண்ணாதிக்கத்தின் எச்சம், சிலப்பதிகார காலம் ஆணாதிக்கமும் தந்தை வழி முறையும் நன்றாக வளர்ச்சி பெற்றிருந்த காலம், அக்காலத்திலும் தொன்மையின் எச்சம் இவ்வழிபாட்டில் காணப்படுகிறது. பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமுதாய அடிப்படையில் தோன்றிய கடவுளர்களும், இத்தெய்வங்களின் உறவினர்களாக்கப்படுகின்றனர். இத்தெய்வத்தின் செயல்களெனப் புராணங்கள் வருணிக்கும் நிகழ்ச்சிகள், ஐயை மீது ஏற்றிக் கூறப்படுகின்றன. உதாரணமாக சிவனது தன்மைகள் சில ஐயை மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.
'மதியின் வெண் தோடு சூடுஞ் சென்னி நுதல் கிழித்து விழித்த
இமையா நூட்டத்து பவள வாய்ச்சி,
தவள வாய் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி......'
கண்ணனது செயல் இவள் மீதேற்றிக் கூறப்படுகிறது.
'மருதின் நடந்து நின்
மாமன் செய் வஞ்சம்
உருளும் சகடம்
உதைத் தருள் செய்குவாய்.
எப்படியாயினும் இப்பெண் தெய்வத்தின் கணவன் எவன் என்று கூறப்படவில்லை. இவளே குமரி, இவளே செழிப்பின் செல்வி, இவளது வழிபாட்டை நடத்தும் உரிமையுடையவர்கள் பெண்களே, ஆண்கள் எட்ட நின்று அருள் பெறுவதற்கே உரியவர்கள், பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எஞ்சிய மரபென்று இதனை ஐயமறக் கொள்ளலாம்.
இனி தந்திரம் என்றழைக்கப்படும் சித்தர் தத்துவத்திலிருந்து பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சங்களைச் சுருக்கமாகக் காணலாம். சித்தர்கள் சக்தி உபாசகர்கள். பட்டினத்தாரையும், இராமலிங்கரையும்
75