பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூலமும், வாணிபத் தொடர்பு மூலமும் உறவுகொண்டிருந்த கிரேக்கர்கள் அவர்களைத் தங்களுடைய மொழியில், மோரீஸ், என்று அழைத்தார்கள் வடமொழியில் மெளரிய' என்ற சொல் மோரியர் என்று திரிந்து வழங்கியது. பெளத்தமத அறநூல்களும் அசோகனது கல்வெட்டுக்களும், புத்த ஜாதகக் கதைகளும், ராஜதரங்கிணி, தாரநாதம் முதலிய புத்தமத வரலாறுகளும் பாலி மொழியிலேயே உள்ளன. கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள அறக்கல்லூரிகளில் பாலி மொழியிலே புத்த தருமம் போதிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் மெளரியர் என்ற சொல் மோரியர் என்று வழங்கப்பட்டது. புலவர்கள். தங்களுக்குப் பரிசில் அளிப்பவர்களை மிகையாகப் புகழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநிலமன்னர்களும் ஆண்டுவந்தனர். ஆயினும் புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடும்போது கடல் சூழ்ந்த புவிக்கெல்லாம் 'தலைவன்' என்றே பாடுவார்கள். அவன் செய்யும் அறச்செயல்களை உலகத்திலேயே சிறந்த பேரரசனதஅறச்செயல்களுக்கு ஒப்பிடுவார்கள். பிற்காலத்து சாசனங்கள் கூட கொங்குநாட்டில் 200 சதுரமைல் பரப்புள்ள ஒரு சிறுபகுதி மன்னனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கிறது. இதேபோல் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனை சகல புவனச் சக்கரவர்த்தி என்று சாசனம் அழைக்கிறது. எனவே குறுநிலத்தை மோரியர் சாம்ராஜ்யத்தோடு ஒப்பிட்டும் குறுநிலமன்னனை மோரியச் சக்கரவர்த்திகளோடு ஒப்பிட்டும் கூறுவது புலவர்களது உயர்வு நவிற்சியுக்தியாகும். மேற்சொன்ன கருத்துக்களை மனதில்கொண்டு அகநானூறில், வரும் மோரியர் பற்றிய குறிப்புக்களை ஆராய்வோம்.

................வென்வேல்
விண்ணுறு நெடுங்குடைக் குடைத்தேர் மோரியர்மோரியர்
திண்கதிர் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி மறைவாய் நிலஇய மலர்வாய்
, மண்டிலத்தன்ன நாடும் பலர்புற விதிர்ந்த அறத்துறை யன்னே

(புறநானூறு 175 ஆதனுங்கனை ஆதிரையானார் பாடியது)

81