பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(புலவர் தன்னை ஆதரிக்கும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். உனது அறத்துறை மோரியரது ஆட்சியின் கீழுள்ள பரந்த நிலப்பரப்பில் நிலைபெற்ற அறத்துறை போன்றது.)

விண் பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைந்த அறை

(அகநானூறு 69)

(வானத்தளவு உயர்ந்த நெடியகுடையையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடைய மோரியர்களது ஆணைச்சக்கரத்தால் குறைப்பட்ட இடங்கள்)

வம்ப மோரியர் புனைத்தேர் நேமிஉருளிய குறைத்த விலங்கு வெள் அறிவிய வரை

(அகநானூறு 251)

(புதியவர்களான மோரியரது அணி செய்யப்பட்ட தேர்களின் சக்கரங்கள் உருண்டதால் பள்ளம் விழுந்து நீர் அருவியாகப்பாயும் இடங்கள்)

மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு, விண்ணுற ஒங்கியபனி இருங்குறை ஒண்கதிர்த் திகிரி உருளியர் குறைந்த அறை

(அகநானூறு 281)

(மோரியர் தென்திசை நோக்கி வரும்பொழுது வானளாவ வளர்ந்த பனி மூடிய குன்றங்கள் மீது தேர்ச்சக்கரங்கள் பதிந்து குன்றங்கள் தேய்ந்து தாழ்ந்தன.) மேலே காட்டிய மேற்கோள்களைக் குறித்து வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்து வருமாறு: மோரியர் என்பது மெளரியர்களைக் குறித்ததாகலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட செய்யுள்கள் மோரியரது ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமல்ல. தான் புகழ நினைக்கும் தலைவனது பெருமையை பழங்காலப் புராணத் தலைவர்களது பெருமையோடு ஒப்பிடுவதும் உண்டு. மகாபாரதத்தில் போரிட்ட இருதரப்புப் படையினருக்கும்,

82