பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.

இவை செல்லரித்துப்போன கொள்கைகள். மார்க்ஸீயவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்து விட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக் கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென் விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதேபோல்தான் சமூக விஞ்ஞானிகளும் படிப்படியான பல சமூக மாறுதல்களின் இறுதிக் கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.

பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு

3