பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




சிலப்பதிகாரம் பற்றி
இளங்கோ

சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன.

அரைசியல் பிழைத் தோர்க்கு
அறங் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்
குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து
வந்நூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு
காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும்
பெயரால்
நாட்டுதும் யாமோர்
பாட்டுடைச் செய்யுள்’

என்ற பதிகச் செய்யுளின் பகுதியைக் காவியத்தின் நோக்கமாகச் சில திறனாய்வாளர் கொள்கின்றனர்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது பாண்டியன் நெடுஞ்செழியன் அழிவையும், கொடுங்கோல் அரசன் தலை நகரான மதுரையின் அழிவையும் குறிப்பிடுகிறது. உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் வஞ்சிக் காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பது கண்ணகி, கோவலன் பழம் பிறப்பை மதுராபதி அறிவிப்பதைக் குறிக்கிறது.

இவை யாவும் கதையின் நீதி நோக்கங்கள் என்பது உண்மையே, ஆனால் இம்மூன்று நோக்கங்களும் காவியத்தின் பொது நோக்கு என்று

88