பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திலையில் செல்வாக்குப் பெற்று வந்த பெருங்குடி வணிகர்கள் நிலவுடைமை ஆதிக்கத்தால் தங்கள் வாணிபத்தைக் கட்டுக் கடங்கி பற்றி நடத்த வேண்டியதாக இருந்தது. மூன்று அரசியல் பிரிவுகள் அவர்களுக்கு விலங்காக இருந்தன. உள் நாட்டிலும் அரசன் தங்கள் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு தங்கள் வாணிபத்துக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர்களது தேவையும் விருப்பமுமாக இருந்தது. இவ்விருப்பத்தையும் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களைத் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார்கள். இதனை நிறைவேற்றப் பல்வேறு வகையில் முயன்றார்கள். தமிழ் நாடு முழுவதிலும் சைன, பெளத்த மதங்களைப் பரப்பி இதனைச் சாதிக்க முயன்றார்கள். இலக்கியத்தின் மூலமும் அவர்களது கருத்தைப் பரப்ப முயன்றார்கள்.

தமிழ் நாடு ஒரே நாடு என்ற கருத்து அவர்களது நலன்களுக்கு ஒத்திருந்தது போலவே மூன்று மண்டலங்களிலுமுள்ள தமிழ் மக்களுடைய நலன்களுக்கும் ஒத்திருந்தது. மக்களது பொருளாதார வாழ்வுக்கு அது ஒரு முன்னேற்றப் பாதையைக் கட்டிற்று. ஆகவே மக்களை ஒரே கருத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் ‘ஒரே தமிழ்நாடு’ என்ற கருத்தைப் பரப்பினர். ஐவகை நிலங்களின் தனித்தனியான பண்பாட்டு அம்சங்களையும், தங்களது பண்பாட்டின் தலைமையில் இணைக்க முயன்றனர். நிலவுடைமைச் சமுதாயம் ஈன்ற நாகரிகத்தின் சிறப்பான அம்சங்களைப் பாதுகாத்து முன்னேற்றமான பல அம்சங்களை அதனோடு இணைத்தனர். நிலவுடைமை வர்க்கத்தை எதிர்க்க இம் முயற்சிகளனைத்தையும், இணைக்க முயன்றனர். மக்களை இவ்வாறு ஒற்றுமைப் படுத்தியதோடல்லாமல், அவர்கள் வணங்கும் தேவர்களை ஒருவருக்கொருவர் உருவாக்கினர். மக்களுக்கும், தேவருக்கும் பொதுவான ஒரு நீதியை உருவாக்க முயன்றனர்.

‘ஐந்திணை மருங்கின் அறம் பொருளின்பம்
மக்கள் தேவ ரென விருசார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு; புணர


92