பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடஇந்தியாவும். கி.மு. 1000. 500 வரை 93 என்றாலும்) என்பதும், வடஇந்தியக் கிளைமொழிகளில், அது, "காவெரபட்டன்" மாக மாறி வழங்கப்பட்டது என்பதும், ஆற்றுப் பெண்தெய்வத்தின் தந்தை பெயர் "கவெரரிஷி” என்றும், கட்டுக்கதை பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது என்பதும் உய்த்துணரப்படும். ஈண்டும், "அகித்தி", அன்பு செலுத்துவோரால், அன்புத்தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அதனால், "அஹிதீப" என அழைக்கப்படுவதும், பெரும்பாலும், "நாகதீபம்” போன்றதே ஆனதும், "தம்பபண்ணி" (ஈழம்) என்ற தீவிற்கு அண்மையில் இருப்பதும், அதனால், நான், முன்னரே கூறியது போல, நாகர்களின் நாடாம் மலபார்க் கடற்கரையான "காரதீபம்" என்ற இடத்திற்குச் சென்றுவிட்டார். அங்கு, "அகித்தி", அதாவது போதிசத்தர் நிறைபேரறிவு பெற்றுவிட்டார். "அகித்தி", ஒருசிலரால், நிலபேறுடைய காரணம் ஏதும் இன்றி, அகஸ்தியராகக் கருதப்பட்டார். . . . ஸ்"ஹபாஹ : ஜாதகா கதைகளில் காணப்படும், தென்னிந்தியா பற்றிய இவைபோலும் குறிப்புகள், கி.மு. முதல் ஆயிரத்தாம் ஆண்டின் மத்தியில், தென் இந்தியா, வடஇந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடவில்லை; இந்தியாவின் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையில் அரசியல் அல்லாத பிற உறவுகள், ! எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே இருந்து வந்தன என்பதை உறுதி செய்கின்றன. புத்தர் இறந்த, பெளத்தர் சொல் நடையில் கூறுதாயின், உலகப் பேரிறைவன். "பரினிபான" படுக்கையில் படுத்துவிட்ட அன்று ("பரினியான பஞ்சம்ஹி நிபன்னெ லொகநாயகொ - மகாவம்சம்:7:1) சிங்கப்படை கொண்ட nஹபாஹவின் மகன் விஜயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழுநூறு பேருடன், "லாள" ("ராத" - கிழக்குவங்காளம்) நாட்டி லிருந்து அவனுடைய தீயொழுக் கத்திற்காக, அவனுடைய தந்தையால் நாடுகடத்தப்பட்டு, சிலோனில் அடியிட்டான். கலத்தில் ஏற்றிக் கடலில் விடப்பட்டான். அவன் கடற்பயணம்